July 4, 2016
இந்தி மொழி இந்தியாவிற்கு வெளியே
எந்த மொழியின் மீதும் நமக்கு வெறுப்பில்லை. இருக்க வேண்டியதுமில்லை. சில வேளைகளில் நம் மீது ஆதிக்கம் செலுத்த முயலும் நாடு, இனம். மொழி, தனி மனிதர் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது அல்லது அதன் மீது எதிர்ப்பும், சினமும் எழுவது இயற்கைதானே. அந்த வகையில் இந்தி, சமற்கிருதம் ஆகிய மொழிகள் மீது நமக்கு ஏற்பட்ட கோபமே அது.
சமகிருதம் என்பது ஒரு மொழி மட்டுமன்று. அது ஒரு பண்பாட்டு வல்லாண்மை. அம்மொழியில் உள்ள வேதங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் அவர்கள் மொழி, பண்பாட்டை உயர்வாகவும், தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் அனைத்தும் நீச மொழிகள்என்றும், பிற பண்பாடுகள் யாவும் இழிவானவை என்றும் கூறும்போது யார் அதனை ஏற்பார்கள்? பிராகிருதம், சமற்கிருதம், இந்தி ஆகிய அனைத்து மொழிகளும் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை. அதனால் நம் எதிர்ப்பும் இந்தி வரை நீள்கிறது.
மேலும் உலகப் பயன்பாட்டின் அடிப்படையிலும் சமற்கிருதம் உதவியாய் இருக்காது.இந்தி மொழி இந்தியாவிற்கு வெளியே பயன்படாது. சமற்கிருதமோ இந்தியாவிற்குள்ளேயே பயன்படாது. அவற்றுள் ஒன்றை இரண்டாவது மொழியாகக் கற்றுக் கொள்வதை விட, டொய்ட்ச் மொழி, ஸ்பானிஷ் மொழி ஆகியனவைகளைக் கற்றுக் கொண்டால் வெளி நாடுகளுக்காவது வேலைக்குச் செல்ல முடியுமே!
- பேராசிரியர் சுப வீரபாண்டியன்
நன்றி ராம நாதன்
இந்தி மொழி இந்தியாவிற்கு வெளியே
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 04, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 04, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.