July 28, 2016
சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
சென்னை நுங்கம்பாக்கம் ரெயில்நிலையத்தில் பெண் என்ஜினீயர் சுவாதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்ட ராம்குமார் சென்னை புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரிடம் ஏற்கனவே போலீஸ் காவலில் விசாரணை நடந்துள்ளது. இந்தநிலையில் ராம்குமாரிடம் மேலும் ஒரு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டு எழும்பூர் 14-வது கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனு இன்று மாஜிஸ்திரேட்டு கோபிநாத் (பொறுப்பு) முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. போலீஸ் காவலில் விசாரணை நடத்துவதற்கு ராம்குமார் தரப்பு வக்கீல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விசாரணையின் முடிவில் வரும் ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி அன்று ஒரு நாள் மட்டும் போலீஸ் காவலில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு கோபிநாத் அனுமதி வழங்கினார். போலீஸ் காவல் விசாரணையின்போது ராம்குமாரின் கையெழுத்தையும், கண்காணிப்பு கேமராவில் அவரது உருவம் பதிவான காட்சிகளையும் ஒப்பிட்டு பார்க்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
Thanks To: Daily Thanthi
சுவாதி கொலை வழக்கு: ராம்குமாருக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.