July 28, 2016
அரை நிர்வாணமாக சங்கிலியால் கட்டி வைத்து காவலர்கள் தாக்கினர்" - இளைஞர் பகீர்!
அரை நிர்வாணமாக சங்கிலியால் கட்டி வைத்து ஒரு நாள் முழுவதும் தாக்கிய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையை சேர்ந்த வாலிபர் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை செல்லூரை சேர்ந்த அஜித் குமார், கொத்தனாராக வேலை செய்து வருகிறார். கடந்த 23 ஆம் தேதி செல்லூர் காவல் துறையினர், அவரது சித்தப்பாவை குறித்து குறித்து விசாரிப்பதற்காக அஜித்குமாரை அழைத்து சென்றனர்.
அப்போது காவல் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை, மயங்கி விழும் வரை, அரை நிர்வாணமாக சங்கிலியால் கட்டி வைத்து காவலர்கள் அவரை அடித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், பாட்டியையும் அடித்து தள்ளி விட்டதாகவும், பணம், மற்றும் செல்போனை பறித்து, பொய் வழக்கு போட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார். தன்னை சங்கிலியால் கட்டி வைத்து அடித்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
அரை நிர்வாணமாக சங்கிலியால் கட்டி வைத்து காவலர்கள் தாக்கினர்" - இளைஞர் பகீர்!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 28, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 28, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.