July 20, 2016
தொடர் போராட்டத்திற்கு பிறகு திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்
உலக மக்கள் தொகையில் ஆண் பெண்ணுக்கு அடுத்தபடியாக முக்கியத்துவம் கொடுக்கப்படும் மூன்றாம் பாலினம் அரவானிகள் ஆவார். இவர்கள் சமூகத்தால் குடும்பத்தால் ஒதுக்கபட்டு பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழக அரசு திருநங்கைகள் என பெயர் சூட்டி சமூகத்தில் அந்தஸ்தை ஏற்படுத்தியது.
இருந்த போதிலும் மனிதனுக்கு உண்ண உணவு உடுக்க உடை இருக்க இடம் இன்றியமையாதது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் குடும்பத்தினரால் விரட்டியடிக்கபட்ட திருநங்கையர்களுக்கு இருக்க இடமின்றி சாலையோரங்களில் வசித்து வருகின்றனர்.
இவர்களின் தொடர் கோரிக்கை மற்றும் போராட்டத்தின் விளைவாக
நெல்லை மாவட்டத்தில் பசுமை இல்லத் திட்டத்தின் கீழ் வீடு கட்டிக் கொடுக்க மாவட்ட ஆட்சியர் கருணாகரன் பரிந்துரை செய்துள்ளார்.
இதில் தமிழக அரசு முதல் கட்டமாக 29 திருநங்கையர்களை தேர்வு செய்து நெல்லையை அடுத்த மானுர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் கிராமத்தில் திருவள்ளுவர் நகரில் விலையில்லா 3 சென்ட் வீட்டு மனை பட்டா வழங்கி பசுமை வீடு திட்டத்தில் மூன்று லட்சம் மதிப்பில் இலவசமாக கழிவறையுடன் கூடிய இரண்டு அறைகள் கொண்ட காங்கிரீட் வீடு வழங்க திட்டமிட்டு அதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகிறது.
தங்களின் வாழ்நாள் கனவுகளில் ஒன்றான சொந்த வீடு கிடைக்க உள்ள மகிழ்ச்சியில் பணி நடைபெறும் இடத்திற்கு இவர்கள் நேரில் சென்று தங்கள் வீடுகளின் ஒவ்வெரு செங்கற்களிலும் தங்கள் மகிழ்ச்சியினை பதிவு செய்து வருகின்றனர் .
அதுமட்டுமின்றி 29 திருநங்கையர்களும் ஒன்றினைந்து கூட்டு வாழ்கை வாழ பழகிவருகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் கனவு நிறைவேறியதாக ஆடி, பாடி தங்கள் வீடுகளோடு புகைகடங்கள் எடுத்தும் அளவற்ற மகிழ்ச்சியில் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்து வருகின்றனர்
நெல்லை மாவட்டத்தில் திருநங்கையர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திடும் வகையிலும் சமுதாயத்தில் சமமாக வாழ்வதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் அரசின் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் இலவசாமாக சொந்த வீடு கட்டி கொடுத்ததற்க்கு அவர்கள் நன்றியை தெரிவித்தனர்.
மேலும் அவர்களின் போராட்டத்திற்கு உறுதுணையாக திருநங்கைகளின் கோரிக்கைகளை தமிழக அரசின் பார்வைக்கு எடுத்து சென்ற நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சிக்கு தங்களின் வாழ்நாள் முழுவதும் நன்றிகடன் பட்டதாகவும் அவர்கள் மகிழ்சியை தெரிவித்தனர்
தொடர் போராட்டத்திற்கு பிறகு திருநங்கைகளுக்கு இலவச வீடு வழங்கும் திட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 20, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 20, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.