July 17, 2016
நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நரிக்குறவ பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாலியல் துன்புறுத்தல் அளித்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அலைகுடிமக்கள் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக தொடர் கொள்ளை நடந்து வந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை என்ற பெயரில் நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த 5 பெண்கள், ஐந்து குழந்தைகள் உட்பட 14 பேரை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
தக்கலை காவல்நிலைய வளாகத்தில் உள்ள காவலர் ஓய்வு அறையில் அவர்களை தங்க வைத்த போலீசார், விசாரணை என்ற பெயரில் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இதுதொடர்பான தகவல்கள் வெளியான நிலையில், நான்கு பேரை மட்டும் கைது செய்த போலீசார், எஞ்சியவர்களை அவரின் சொந்த ஊரான மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக அலைகுடிமக்கள் சமூக சங்கத்தில் புகார் அளித்த பாதிக்கப்பட்டோர், தக்கலை காவல்நிலையம் முன்பு கண்டனம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இருநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதால், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்
நரிக்குறவ பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் - காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 17, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 17, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.