Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 20, 2016

இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்முறை செய்ய முயன்ற இருவர் கைது



இளம்பெண்ணைக் கடத்திப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கில் கூலித்தொழிலாளியையும் அவரது சகோதரியையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் பவித்திரத்தைச் சேர்ந்த ஆனந்த் வண்ணம் பூசும் வேலை செய்து வருகிறார். இவர் பழையபாளையம் முருகேசனின் 16வயது மகளைக் காதலித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளம் பெண்ணைத் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஆனந்த் கடத்தியுள்ளார்.

இது குறித்துப் பெண்ணின் தந்தை முருகேசன் அளித்த புகாரின் பேரில் சேந்தமங்கலம் காவல்துறையினர் ஆனந்தின் சகோதரி வீட்டில் இருந்து இளம்பெண்ணை மீட்டனர்.

ஆனந்தையும் அவரது சகோதரி கலையரசியையும் கைது செய்து நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திச் சிறையில் அடைத்தனர்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.