அதிகாரிகளின் வீடுகளில் இனி போலீஸார் துணி துவைக்கக் கூடாது... டிஜிபி அதிரடி உத்தரவு
போலீஸ் உயர் அதிகாரிகளின் வீடுகளில் வீட்டு வேலைக்கு பயன்படுத்தப்பட்டு வரும் காவலர்களை மீண்டும் போலீஸ் பணிக்கு அனுப்ப டிஜிபி அசோக் குமார் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளின் வீடுகளில் ஏராளமான போலீஸார் தற்போது வீட்டு வேலை செய்து வருகின்றனர். காவலர்களான அவர்கள் வேலைக்காரர்கள் ரேஞ்சுக்கு நடத்தப்படுகின்றனர்.
காய்கறி வாங்குவது, நாயைக் குளிப்பாட்டுவது, தோட்டை வேலை பார்ப்பது, துணி துவைப்பது என்று பல வீட்டு வேலைகளில் இவர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். சென்னையில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் இதுபோன்ற வேலையில் ஈடுபட்டுள்ளனர்.
குற்றச் செயல்களைத் தடுக்க ஆள் இல்லை
சென்னையில் பல்வேறு குற்றச் செயல்கள் அதிகரித்து வருகின்றனர். போதிய அளவில் போலீஸார் இல்லாததால் இவர்களைத் தடுப்பதிலும், பிடிப்பதிலும் பெரும் தாமதம் ஏற்படுகிறது.
டிஜிபி ஆலோசனை
சில நாட்களுக்கு முன்பு டிஜிபி அசோக்குமார் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவை சந்தித்து தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் குற்ற சம்பவங்களை தடுப்பது குறித்தும், குற்றச் சம்பவங்களை தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
காலியிடங்களை நிரப்பக் கோரிக்கை
இந்த ஆலோசனையின்போது சென்னை மாநகரத்திற்கு தேவையான காவலர்களை நியமிக்கவும் தமிழகம் முழுவதும் உள்ள 25,000 காவலர் காலிப்பணியிடங்களை பூர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தலைமை செயலாளரிடம் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.
700 பேரை திரும்ப அனுப்ப உத்தரவு
மேலும் சென்னையில் வசித்து வரும் ஓய்வுப்பெற்ற ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் வீடுகளில் தற்போது சென்னையில் உள்ள போலீசார் எண்ணிக்கையில் 3 சதவீதம், அதாவது 700க்கும் மேற்பட்ட காவலர்கள், அதிகாரிகள் வீடுகளில் துணித்துவைக்கவும், வீட்டை துடைக்கவும் ஈடுபடுத்தி வருகின்றனர்.
டிஜிபி அசோக்குமார்
சென்னையில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்யும் காவலர்களை நியமித்தால் போதுமானதாக இருக்கும். இதையடுத்து ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரிகள் வீடுகளில் வீட்டு வேலை செய்யும் காவலர்களை திரும்ப பெற



No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.