July 12, 2016
தேர்தல் விதியை மீறி பொதுக் கூட்டம்: நீதிமன்றத்தில் ஆஜராக ராமதாஸிற்கு உத்தரவு
தேர்தல் விதியை மீறி பொதுக் கூட்டம் நடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் இன்றோ அல்லது நாளையோ பன்ருட்டி நீதிமன்றத்தில் ஆஜராக பாமக நிறுவனர் ராமதாசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலின்போது அனுமதிக்கப்படாத இடத்தில் பொதுக் கூட்டம்
நடத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் தேர்தல் ஆணைய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு விசாரணை பன்ருட்டி 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்
நடைபெற்று வருகிறது. அந்த வழக்கில் ஜுலை12ம் தேதி ராமதாஸ் ஆஜராக
உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆஜராவதிலிருந்து விலக்கு கோரியும், வழக்கை ரத்து செய்யக்கோரியும் பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி பிரகாஷ், முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது இன்றோ அல்லது நாளையோ பன்ருட்டி நீதிமன்றத்தில் ராமதாஸ் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை வரும் 21ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
தேர்தல் விதியை மீறி பொதுக் கூட்டம்: நீதிமன்றத்தில் ஆஜராக ராமதாஸிற்கு உத்தரவு
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 12, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 12, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.