சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரை உறுதிப்படுத்த புழல் சிறையில் நாளை அடையாள அணிவக்குப்பு நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொருள் பொறியாளரான சுவாதி என்ற இளம்பெண் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞர் கடந்த ஜூலை 1ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
ராம்குமாரை போலீசார் பிடிக்க சென்ற போது, அவர் தற்கொலை முயற்சி செய்ததால், அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. தொடர்ந்து, அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிகப்பட்டிருந்த ராம்குமாரிடம் நேரில் சென்று விசாரணை நடத்திய நீதிபதி, வருகிற 18-ம் தேதி வரை ராம்குமாரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, அவர் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.