Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

நாங்கள் இங்கு இந்தியாவை காப்பாற்றுகிறோம் என்று நினைக்கிறீர்களா



நாங்கள் இங்கு இந்தியாவை காப்பாற்றுகிறோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் அப்படி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறோம் : காஷ்மீரிய போலீஸ் அதிகாரி

ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த காஷ்மீர் விடுதலை போராளி புர்ஹான் வானியின் கொலை காஷ்மீரில் மிகப்பெரிய கிளர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், அங்கு இதுவரை 35 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள இளைஞர்களிடையேயான கிளர்ச்சி, இராணுவத்தினரின், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காவல்துறையின் கடும் நெருக்கடிக்கு மத்தியிலும் மிகப்பெரிய அளவில் பரவி வருகிறது. குறிப்பாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் நடவடிக்கைகள் மிக அதிக அளவிலான விமர்சனங்களை பெற்று வருகிறது. இது ஒரு புறமிருக்க, ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத காவல்துறையினர், நமக்கு காவல்துறை குறித்த வேறொரு கோணத்தை தருகிறார்கள்.

ஜம்மு மற்றும் காஷ்மீரைச் சேர்ந்த மேலாளர் ஒருவர் கூறியது :
“எனக்கு வீட்டிற்கு செல்லவே அச்சமாக இருக்கிறது. ஏனெனில், நான் தென் காஷ்மீரை சேர்ந்தவன். நாங்கள் மக்களுக்கு எதிரானவர்களாக ஆகி இருக்கிறோம். எனது குடும்பத்தை நினைத்து நான் பயப்படுகிறேன். நாங்களும் அதே சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆகினும் நாங்கள் தனிமை படுத்தப்பட்டு இருக்கிறோம்.
ஒவ்வொரு முறை காஷ்மீரில் ஏதேனும் பிரச்சனை வரும் போதும் நாங்களே அதனை சமாளிக்க முன் நிறுத்தப்படுகிறோம். நாங்கள் அந்த பிரச்சனை கையை மீறி செல்வதாக நினைக்கும் போது சுடத் தொடங்க வேண்டும்.
காஷ்மீரில் துப்பாக்கிக் குண்டு தான் கடைசி தடுப்பு. ஆனால், அது என்றைக்குமே வெற்றி பெற்றதில்லை. தொடரும் மரணங்கள் அதிக அளவிலான மக்களை தெருவிற்கு வந்து போராடத் தூண்டும். காஷ்மீர் தற்போது பாலஸ்தீனத்தைப் போல் ஆகியுள்ளது. சில நேரங்களில் நாங்கள் என்ன செய்கிறோம் என்று கூட எங்களுக்கு தெரியாது.’’”

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு காவல் துறை அதிகாரி கூறியது :
மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவது தான் எங்களுக்கு கடைசி வழி. எங்களுக்கு ஏகே-47 ரக துப்பாக்கி காவல்துறையில் இருந்து வழங்கப்படும். அதை எங்களிடம் இருந்து யாரேனும் பறிக்க முயலும் போது சுட வேண்டும். எங்களுடைய ஆயுதம் தான் எங்களுடைய உயிரை விடவும் முக்கியம்.
அரசு கட்டிடத்தின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ  கல் வீசி  தாக்குதல் நடத்தப்படும் போதும் இதே நிலை தான். போராட்டக்காரர்களிடம் நாங்கள் சிக்கினால் எங்களை அவர்கள் சும்மா விடமாட்டார்கள் என்பது எங்களுக்கு தெரியும்.
ஜம்மு காஷ்மீர் பிரச்சனை என்பது ஒரு சர்வதேச  பிரச்சனை. அதனை இந்தியா-பாகிஸ்தான் தீர்க்க வேண்டும். இது காவல்துறை முதல் பாதுகாப்பு படையினர் வரை அனைவருக்கும் தெரியும்.
ஒவ்வொரு முறை காஷ்மீரில் இந்திய எதிர்ப்பு போராட்டம் வெடிக்கும் போதும், பிரச்னையை கட்டுக்குள் கொண்டு வர, இந்திய் அரசு அதிக அளவிலான மத்திய ராணுவப்படையை இங்கு குவிக்கிறது. நாங்களும்(காவல்துறை), மத்திய ராணுவப்படையும் போராட்டக்காரர்களிடம் நடந்து கொள்வதில் மிகப்பெரிய அளவில் வித்தியாசங்கள் உள்ளன. நாங்கள் போராட்டக்காரர்களை நிதானப்படுத்துவதில் மிகவும் கவனத்துடன் செயல்படுவோம். ஏனெனில், மத்திய ரிசர்வ் போலீஸ் படை அப்போது வந்துவிட்டு போய்விடுவார்கள். ஆனால், இங்கு நிலவும் சூழல் எங்களுக்கு மட்டுமே மிகவும் கடினமானதாக இருக்கும்.
மற்றொரு ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மேலாளர் கூறியது:
பெல்லேட் குண்டுகள் தடை செய்யப்பட வேண்டும். ஆனால், அதனை காவல்துறையால் செய்ய முடியாது. இந்திய அரசு தான் அதற்கு ஏற்ற நடவடிக்கைகளை செய்ய வேண்டும்.
நான் 1990 முதல் காவல்துறையில் இருக்கிறேன். ஆனால், இதுவரை இது போன்ற ஒரு துளியும் அச்சமற்ற இளைஞர் பட்டாளத்தை பார்த்தது இல்லை. துப்பாக்கி குண்டுகளுக்கும், கற்களுக்கும் வித்தியாசம் தெரியாத அளவிற்கு அவர்கள் மிகவும் கோவத்துடன் இருக்கிறார்கள். கற்களை வீசி தாக்குதல் நடத்தினால், காவல்துறை பதிலுக்கு துப்பாக்கி குண்டுகளை பயன்படுத்தும் என்பதையும் அவர்கள் அறிந்தே வைத்து இருக்கிறார்கள்.
இங்கிருக்கும் இளைஞர்கள் இங்கு தொடரும் பிரச்சனைகளால் மிகுந்த கோபத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். 27 வருடங்களாக இங்கு தொடரும் வன்முறையின் காரணமாக இங்கிருக்கும் மக்களும், காவல்துறையும் எந்த அளவிற்கு வன்முறைக்கு பழகி இருக்கிறார்கள் என்றால், இதை பெரிய விடையமாக காவல்துறை கண்டுகொள்வதுமில்லை; மக்கள் வன்முறையினை கண்டு அஞ்சுவதுமில்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான சிறப்பு காவல் துறை அதிகாரி கூறியது :
நாங்கள் வெறும் மேல் இருக்கும் சக்தி வாய்ந்தவர்களின் பகடைக் காய்கள் தான்.
போராளிகள், அவர்கள் இறந்து விடுவார்கள் என்று தெரிந்தே தான் ஒரு குறிக்கோளோடு தான் துப்பாக்கியை கையில் எடுக்கிறார்கள். அவர்கள் தாங்களை பற்றியோ பொருள்கள் மீதான ஈர்ப்பினை பற்றியோ, பொருளாதார பாதுகாப்பை பற்றியோ கவலைப்படுவதில்லை. ஆனால், நாங்கள் வெறும் வேலைக்காகவே காவல்துறையை தேர்ந்தெடுத்து இருக்கிறோம். இந்த வேலையை வைத்து தான் எங்களது குடும்பம் மற்றும் குழந்தைகளை காப்பாற்றுகிறோம்.
நாங்கள் இங்கு இந்தியாவை காப்பாற்றுகிறோம் என்று நினைக்கிறீர்களா? நாங்கள் அப்படி செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.
ஆம், நாங்கள் துப்பாக்கிக் குண்டுகளை பயன்படுத்துகிறோம். ஆனால், அது எங்களால் கட்டுப்படுத்தப்படுவது இல்லை. இங்கு கள நிலவரம் என்ன என்றே தெரியாத நபர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.
இங்கு இருக்கும் நிறைய காவல்துறை அதிகாரிகள் காஷ்மீர் அமைதியாகவும், வளமாகவும் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். காஷ்மீர் விடுதலை அடைய வேண்டும் என்று விரும்பும் காவல்துறை அதிகார்கள் நிறைய பேர் இங்கு உண்டு. ஆனால், அவர்கள் வேலை மற்றும் ஆசைக்கு நடுவே மாட்டிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் ஆதரவற்றவர்களாக இருக்கிறோம்.
ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான மற்றொரு சிறப்பு காவல் துறை அதிகாரி கூறியது :
ஹம் அஸாத் ஹிந்துஸ்தான் கே குலாம் சிப்பாஹி ஹை (நாங்கள் சுதந்திர இந்தியாவின் அடிமை சிப்பாய்கள்!)
உண்மை என்னவெனில் இந்தியா இங்கு இருக்கும் காஷ்மீரிகளை நம்புவதே கிடையாது. அது உள்ளூரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாகினும் சரி அல்லது காவல்துறை ஆகினும் சரி. போராட்ட குழுக்களை சேர்ந்தவர்கள் இங்கு தேர்ந்தெடுக்கப்படும் முக்கிய காஷ்மீரிய அரசியல்வாதிகளை பொம்மைகள் என்று அழைப்பது சரி தான். காஷ்மீரில் நடைபெற வேண்டிய அனைத்தையும் எப்படி டெல்லி தான் முடிவு செய்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும். முதலமைச்சரை கூட ஏதேனும் பாதுகாப்பு தொடர்பான உயர்மட்ட கூட்டம் நடைபெறும் போது, அதில் சேர்ப்பதை பற்றி மத்திய அரசு யோசிப்பதில்லை.
இந்த போராட்டத்தில் பல்வேறுபட்ட மக்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் வெவ்வேறு நிறுவனங்களை சேர்ந்தவர்கள்; அரசியல் கட்சிகளை எதிர்ப்பவர்கள்; அல்லது வன்முறையில் இருந்து சிறிது தூரம் விலகுவதற்காக அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். இங்கு இன்னும் தொடர்ந்து புர்ஹான் வானிகள் பிறப்பெடுப்பார்கள் என்பது நமக்கு தெரியும். சிலர் இதனை விடுதலையை நோக்கி பார்க்கலாம். ஆனால், என்னை பொறுத்த வரை நாங்கள் எங்களது அடுத்த தலைமுறையை இழந்து வருகிறோம்!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.