Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 10, 2016

நன்கு தெரிந்தவர்… அறிமுகமானவர் என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை தேவை



சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த மூன்று இல்லத்தரசிகள்
சமீபத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருக்கிறாரகள். அதன் பின்புலத்தை ஆராய்ந்தபோது ஊருக்கே அதிர்ச்சி.
அந்த ஏரியாவில் டீக்கடை நடத்தி வரும் ஒருவனும், எலக்ட்ரீஷியனாக இருக்கும் அவனுடைய
சகோதரனும் சேர்ந்து, அங்குள்ள வீடுகளில் பிளம்பிங் வேலை, எலக்ட்ரீஷியன் வேலை, கேபிள் போன்றவற்றுக்காக சென்று வருவது வழக்கம்.
இதைப் பயன்படுத்திக் கொண்டு பல வீடுகளின் பாத்ரூம்களில் மினியேச்சர் கேமராக்களை பொருத்தி, குளியல்
காட்சிகளை வீடியோ பதிவு செய்து, அதேபகுதியைச் சேர்ந்த பல இளைஞர்களுக்கும்
இந்த இருவரும் விற்றிருக்கிறார்கள். இது, சம்பந்தபட்ட பெண்களின் கவனத்துக்கு வந்துவிட,
சிலர் தற்கொலை முயற்சியில் குதித்து,
காப்பாற்றப்பட்டுள்ளனர். பலர், வீட்டைவிட்டு
வெளியில் வராமல்
மனஉளைச்சலோடு முடங்கிக்கிடக்கிறார்கள்.
கயவர்கள் இருவர் உட்பட மேலும் சில
இளைஞர்களை கைது செய்திருக்கிறது போலீஸ்.
கிராமமோ… நகரமோ… கேபிள், தண்ணீர் கேன், கேஸ் சிலிண்டர், எலக்ட்ரீஷியன் என எந்த வேலையாக
இருந்தாலும் சம்பந்தபட்ட நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்கும்போது வேலை முடியும்
வரை அவர்களை வீட்டில் உள்ள ஆண்கள் கண்காணித்தபடி இருப்பதே பாதுகாப்பது.
முக்கியமாக வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது இப்படிப்பட்ட நபர்களை அனுமதிக்காமல் குடும்பத்தினரில் ஆண்கள் சிலரும் இருக்கும்போது அனுமதிப்பதே சாலச்சிறந்தது.
நன்கு தெரிந்தவர்… அறிமுகமானவர்
என்றால்கூட, பலமடங்கு எச்சரிக்கை!

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.