Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

கட்டாயத்திருமணம் செய்து வைத்த பெண் மீண்டும் காதலனை கரம் பிடித்தார்!



பெற்றோர் கட்டாயத்தின் பேரில் திருமணம் செய்த பெண், பின்னர் கணவரை விட்டு பிரிந்து மீண்டும் காதலனுடன் வாழ்க்கையை துவங்கியுள்ளார். இதனையடுத்து தங்கள் உயிருக்கு உறவினர்களால் ஆபத்து உள்ளதால் பாதுகாப்புகோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளனர்.
சங்கரன்கோவிலை சேர்ந்த எம்.எஸ்.சி பட்டதாரி யுவராஜ் ( வயது 26)  வாலிபர், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த எம்.பி.ஏ. படித்த சரண்யாவை ( வயது 25) காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்ற போதிலும், இருவர் வீட்டிலும் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் காதலன் யுவராஜை கொலை செய்து விடுவதாக மிரட்டி சரண்யாவிற்கு ஜுன் 16ம் தேதி கோயிலில் ஆனந்தகுமார் என்பவருடன் கட்டாய திருமணம் செய்துள்ளனர். தொடர்ந்து சரண்யா கணவர் வீட்டிலிருந்து வெளியேறி, காதலர் யுவராஜை திருமணம் செய்துள்ளார்.
கடந்த ஒரு மாத காலமாக உயிருக்கு பயந்து சுற்றிய இந்த ஜோடி, தற்போது சங்கரன்கோவிலுக்கு வந்துள்ளனர். இந்நிலையில் தங்கள் உயிருக்கு பாதுகாப்புகோரி முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு ஒன்றையும் அனுப்பியுள்ளனர்.
மேலும் விசாரணை என்ற பெயரில் தனது குடும்ப உறுப்பினர்களை போலீசார் மிரட்டி வருவதாகவும் யுவராஜ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளரர்.
  

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.