Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 31, 2016

காதலிக்க மறுத்த இளம்பெண் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு : கட்டிப்பிடித்ததில் வாலிபர் சாவு


விழுப்புரம் அருகே மாம்பழப்பட்டு ரோடு இந்திரா நகரை சேர்ந்தவர் செந்தில் (30). இவர் சில ஆண்டுகளுக்கு முன் மினி பஸ்சில் நடத்துனராக வேலை செய்து வந்தார். அப்போது, வி.பாளையத்தை சேர்ந்த பிளஸ் 1 படித்த மாணவி சங்கீதாவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தலையாக காதலித்து வந்துள்ளார். இவர், கடந்த 8 மாதத்துக்குமுன் அப்பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் வலது கை, வலது கால் துண்டிக்கப்பட்டு கிடந்தார்.

இதுதொடர்பாக விழுப்புரம் மேற்கு காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தியபோது, `சங்கீதாவின் வீட்டார் என்னை கூலிப்படையை வைத்து தாக்கினர்’ என்று தெரிவித்தார். ஆனால், மதுபோதையில் தண்டவாளத்தில் கிடந்தபோது ரயில் ஏறி கை, கால்கள் துண்டானது என்பதும், காதலை ஏற்க மறுத்ததால் பொய்யான தகவலை கூறி மாணவியின் பெற்றோரை சிக்க வைக்க முயற்சித்தார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து செந்திலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையே சங்கீதா பிளஸ்-2 முடித்துவிட்டு வீட்டில் இருந்துள்ளார்.

 இந்தநிலையில், சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்த செந்தில், காதலை ஏற்கும்படி மாணவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதற்கு சங்கீதா மறுப்பு தெரிவித்துள்ளார். நேற்று மதியம் சங்கீதா, தனது தம்பி, தங்கையுடன் வீட்டில் இருந்தபோது, கையில் பெட்ரோல் கேனுடன் அங்கு வந்த செந்தில் கதவை தட்டி உள்ளார். சங்கீதா கதவை திறந்தவுடன் பெட்ரோலை ஊற்றி  சிகரெட் லைட்டரை பற்றவைத்தார். சங்கீதா உடலில் தீ பரவியதும் தம்பி, தங்கை அலறியடித்து வெளியே ஓடிவிட்டனர். தீயில் எரிந்த சங்கீதாவை செந்தில் கட்டி பிடித்துக் கொண்டார். இதில் இருவரும் கருகினர்.

உடனே அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இருவரையும் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி செந்தில் இறந்தார். மேல்சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு சங்கீதா அனுப்பி வைக்கப்பட்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதால் கலவரம் ஏதும் ஏற்படாமல் தடுக்க ஆயுதப்படை போலீசார் அப்பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Thanks To: Dinakaran


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.