July 10, 2016
அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதில் உள்ள நன்மைகள்..!!
மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்று ’செக்ஸ்’.இன்பத்திற்காக மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்கிறோம் என நீங்கள் நினைத்தால் அது தவறு.இன்பம் தவிர பல நன்மைகள் செக்ஸ் மூலம் நமக்கு கிடைக்கின்றன.குறிப்பாக அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்கு எண்ணில் அடங்கா மருத்துவ நன்மைகள் கிடைக்கின்றன.அவை என்ன என தெரிந்து கொள்ள வேண்டுமா?அப்போ இத படிங்க முதல்ல...
சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிகளின்படி, வாரத்தில் இரண்டு முறை செக்ஸ் உறவு வைத்துக்கொள்பவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக தெரியவந்துள்ளது.மாதத்தில் ஒரு முறை மட்டும் உறவு கொள்பவர்களுக்கு மாரடைப்பிற்கான அறிகுறிகள் அதிகமாகவே இருக்கிறதாம்
அடிக்கடி உடலுறவு கொள்பவர்களுக்கு இயற்கையாகவே உடலின் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது
செக்ஸில் அடிக்கடி புகுந்து விளையாடுபவர்கள் மன அழுத்தத்தை எளிதாக கையாள்வதாகவும்,எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்
உடல் வலி,தலைவலி போன்ற காரணங்களுக்காக செக்ஸை தள்ளிப்போடாதீர்கள்.நீங்கள் செக்சில் உச்சமடையும் போது, உங்கள் உடலின் ஆக்சிடாசின் என்ற ஹார்மோன் ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறது.இது அனைத்து வகையான வலிகளுக்கும் தீர்வாக அமைகிறது
உடல் வலி,தலைவலி போன்ற காரணங்களுக்காக செக்ஸை தள்ளிப்போடாதீர்கள்.நீங்கள் செக்சில் உச்சமடையும் போது, உங்கள் உடலின் ஆக்சிடாசின் என்ற ஹார்மோன் ஐந்து மடங்கு அதிகமாக சுரக்கிறது.இது அனைத்து வகையான வலிகளுக்கும் தீர்வாக அமைகிறது
சில வாரங்களுக்கு ஒரு முறை செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆணை விட, ஒரு வாரத்தில் இரு முறை செக்ஸ் உறவு மூலம் உச்சமடையும் ஆண்கள் அதிக நாட்கள் வாழ்வதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன
இயல்பாகவே செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது இரத்த ஒட்டம் வேகமடையும்.இதனால் உடலில் உள்ள அனைத்து பாகங்களிலும் உள்ள கெட்ட இரத்தம் வெளியேற்றப்பட்டு,சுத்த இரத்தம் பாய்கிறது. உடல் உறுப்புகள் புத்துணர்வு அடைந்து,உடலை உற்சாகமடைய செய்கின்றன
ஆழ்ந்த உறக்கம் கிடைக்காமல் அவதிப்படுவர்களுக்கு செக்ஸ் ஒரு நல்ல தீர்வு.அடிக்கடி செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களின் மனம் அமைதி அடைவதோடு,ஆழ்ந்த உறக்கம் கிடைக்க வாய்ப்பும் ஏற்படுகிறது
ஜிம்மில் பல மணி நேரம் உடற்பயிற்சி மேற்கொண்டுதான் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்பதில்லை.அடிக்கடி உடலுறவு கொள்வதன் மூலமும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ளலாம்.அரை மணி நேரம் செக்ஸில் ஈடுபட்டால் 80-க்கும் அதிகமான கலோரிகளை எரிக்க முடியும்
ஆண் உடலுறவு கொள்ளும் போது சுரக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் உடலின் தசை,எழும்புகள் மற்றும் இதயத்தை வலுப்படுத்துகின்றன.பெண் செக்ஸில் ஈடுபடும் போது சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் இதய நோய்களுக்கு தீர்வாக அமைவதுடன்,உடல் வாசனையையும் தீர்மானிக்கிறது
அடிக்கடி செக்ஸ் வைத்துக் கொள்வதில் உள்ள நன்மைகள்..!!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.