July 31, 2016
சுவாதி கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற ராம்குமார் தரப்பில் வலியுறுத்தல்
சுவாதி கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி விரைவில் மனுதாக்கல் செய்யப்படும் என ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி கொலை செய்யப்பட்டது தொடர்பாக ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார் தரப்பு வழக்கறிஞர் ராம்ராஜ், சுவாதி கொலை வழக்கில் ராம்குமாரை குற்றவாளியாக்க சதித்திட்டம் நடப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த கோரி விரைவில் மனு தாக்கல் செய்யப்படும் என்றும், வழக்கு விசாரணை நேர்மையாக நடக்க வேறு மாநிலத்திற்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணைக்கு ராம்குமாரின் ரத்த மாதிரியை சேகரித்துள்ளது சட்ட விரோதமானது என்றும் ராம்ராஜ் தெரிவித்தார்.
சுவாதி கொலை வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற ராம்குமார் தரப்பில் வலியுறுத்தல்
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 31, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.