திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் நிறைமாத கர்ப்பிணியை சரமாரியாக தாக்கிய போலீஸார்: ஊருக்கு செல்லும்போது பேருந்தில் பனிக்குடம் உடைந்தது
செய்யாறு பகுதியை சேர்ந்தவர் தமிழரசு (35). இவரது மனைவி முத்தாம்பிகை (31). இவர்களுக்கு முத்தமிழரசி என்ற 2 வயது மகள் உள்ளார். முத்தாம்பிகை பிரசவத்திற்காக திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்துாரிபாய் காந்தி மருத்துவமனைக்கு நேற்று மதியம் சென்றார்.
தனது மனைவி அனுமதிக்கப்பட்ட வார்டுக்கு வெளியே தனது மகளுடன் தமிழரசு காத்திருந்தார். அவரது குழந்தை விடாமல் அழுதுள்ளது, அப்போது அங்கிருந்த பெண் 3 போலீசார் குழந்தையின் அழுகையை நிறுத்து இல்லை வெளியே செல் என அவரை கூற தமிழரசு குழந்தை அழுகையை நிறுத்த மாட்டேன் என்கிறது என சொல்லியிருக்கிறார்.
எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வழக்கம் போல் தகாத வார்த்தையால் திட்டியுள்ளனர். சத்தம் கெட்டு வெளியில் வந்த அவரது மனைவி ஏன் தகராறு செய்யறீங்க போலீசை கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த 3 பெண் போலீஸாரும் நிறைமாத கர்ப்பிணியான முத்தாம்பிகை மற்றும் அவரது கணவர் தமிழரசு ஆகியோரை அடித்து உதைத்துள்ளனர். மேலும் முத்தாம்பிகையின் வயிற்றில் காலால் எட்டி உதைத் தனர். அதன்பின் மருத்துவமனையில் உள்ள காவல் நிலையத்துக்கு இருவரையும் அழைத்துச் சென்று 3 பெண் போலீஸார் மற்றும் 2 ஆண் போலீஸார் சேர்த்து அடித்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து பத்திரிகையாளர்கள் மருத்துவமனையில் குவிந்தனர். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்து திருவல்லிக்கேணி உதவி ஆணையர் முத்துவேல்பாண்டி மருத்துவமனைக்கு வந்தார். “நாங்கள் ஒரு தவறும் செய்ய வில்லை. எங்களை போலீஸார் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து உதைக்கின்றனர். கஞ்சா உள்ளிட்ட பல்வேறு பொய் வழக்கு களை போட்டு கைது செய்யப் போவதாக மிரட்டுகின்றனர். எங்களை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” உதவி ஆணையரிடம் சொல்லி அழுதனர்.
அவர்களை சமாதானப் படுத்திய முத்துவேல்பாண்டி, தவறு செய்த போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து “இந்த மருத்துவமனையில் சிகிச்சைப் பெறவே பயமாக இருக்கிறது. நாங்கள் ஊருக்கே செல்கிறோம்” என்று கூறிய தமிழரசு, மனைவி முத்தாம்பிகையை அழைத்துக் கொண்டு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார்.
முத்தாம்பிகை திருப்பதியில் உள்ள கல்லூரியில் சட்டம் படித்து வருகிறார் அதே கல்லூரியில் அவர்து கணவர் தமிழரசு ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். தமிழகத்தில் குழந்தை பிறந்தால் உதவித் தொகை கிடைக்கும் என்பதால், சென்னைக்கு அழைத்து வந்து இந்த மருத்துவமனையில் அனுமதித்தேன் என அவரது கணவர் கூறினார்
பேருந்தில் சென்றுகொண்டி ருந்த போது போரூர் அருகே முத்தாம்பிக்கை திடீரென்று வலியால் துடித்தார். அவருடைய பனிக்குடம் உடைந்தது. இதைப் பார்த்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். பேருந்தை நிறுத்திய பொதுமக்கள் ஆம்புலன்ஸில் இருவரையும் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.
என்னையும் எனது மனைவியையும் அடித்து உதைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய போலீஸார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மனைவிக்கு பனிக்குடம் உடைந்து விட்டதால், இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக் கிறேன். செலவுக்குக்கூட பணம் இல்லை. என்ன செய்யப் போகிறேன் என்று தெரிய வில்லை”என்று கூறினார்.
இந்த காவல் கொடுரீகளுக்கு தாங்களும் பெண்கள் என தெரியவில்லையா அதுவும் படித்த நிறை மாத பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்துள்ளனர் இவர்களை போன்றவர்களை காவல் துறையை விட்டே நீக்க வேண்டும். இவர்களால் அந்த துறைக்கே களங்கம்
நன்றி ராம நாதன்


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.