July 14, 2016
சென்னையில் என்னதாயாநடக்குது ஒரே நாளில் நடந்த சில சம்பவங்கள்
4–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியர் கைது
நீலாங்கரை அருகே பள்ளியில் 4–ம் வகுப்பு மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.
மாணவியிடம் சில்மிஷம்
சென்னையை அடுத்த நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஆந்திராவை சேர்ந்த சாமி (வயது 30) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
அதே பள்ளியில் 4–ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் ஆசிரியர் சாமி சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.
ஆசிரியர் கைது
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு சென்று ஆசிரியருக்கு தர்மஅடி கொடுத்தனர். பின்னர் நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்ததும் நீலாங்கரை போலீசார் அந்த பள்ளிக்கு விரைந்து சென்றனர். பின்னர் ஆசிரியர் சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும், அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர் பலி
* வடபழனி அசோக்பில்லர் அருகே நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது மாநகர பஸ் மோதியதில், வாலிபர் பலியானார். பஸ் டிரைவரை கைது செய்த போலீசார், பலியானவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
* நங்கநல்லூர் சுதந்திர தின பூங்காவில் இருந்த சுமார் 50 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று நேற்று இரவு சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* முகவரி கேட்பது போல் நடித்து மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியை சேர்ந்த மணிமேகலை (65) என்பவரிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.
* சேலையூர் பகுதியை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (48), காசிமேடு கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தார். அங்கு இவரது 9 பவுன் தங்கநகை வைத்திருந்த பையை யாரோ திருடிச்சென்றுவிட்டனர்.
பெண் தற்கொலை
* வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (58) தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
* புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி. நகர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (38) என்பவரது வீட்டிற்குள் புகுந்து திருட முயன்ற புதுச்சேரியை சேர்ந்த வீரசிங்கத்தை (30) போலீசார் கைது செய்தனர்.
* தரமணியை சேர்ந்த சுப்பராயன் (63), அஜீரண கோளாறு காரணமாக வேளச்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற சென்றார். அங்கு ஊசி போட்டதும் மயங்கி விழுந்த அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.
* அண்ணாநகர் மேற்கு 21–வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்த ஜெயசித்ரா (40) என்பவரது வீட்டில், மர்மநபர்கள் 20 பவுன் நகைகளை திருடிச்சென்றனர்.
சங்கிலி பறிப்பு
* சாலையில் நடந்து சென்ற பழைய பெருங்களத்தூர் ஆர்.எம்.கே. நகர் பகுதியை சேர்ந்த மல்லிகாவிடம் (54) மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்றனர்.
* வேளச்சேரி சாலையில் செம்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஆரணி அருகே உள்ள ஆதனூரை சேர்ந்த விஜயராஜ் (22) தனியார் பள்ளி பஸ் மோதி இறந்தார். இதுதொடர்பாக பஸ் டிரைவர் பால்ராஜை (45) போலீசார் கைது செய்தனர்.
* வேலூர் ஆற்காட்டில் இருந்து சைதாப்பேட்டைக்கு மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தில் வந்தபோது சாலையில் கவிழ்ந்தது. இதில் லாரி டிரைவர் ஜெகதீஸ் (35) காயம் அடைந்தார். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
* பெரம்பூர் பகுதியில் 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, வியாசர்பாடி பெரியார் நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (26) என்பவரை செம்பியம் மகளிர் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
சென்னையில் என்னதாயாநடக்குது ஒரே நாளில் நடந்த சில சம்பவங்கள்
Reviewed by மறத்தமிழன்
on
July 14, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 14, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.