July 24, 2016
விசாரணைக்காக அழைத்து சென்றவர் காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி!
கமுதி அருகே விசாரணைக்காக காவலர்களால் அழைத்து சென்றவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் கிராம மக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே சில தினங்களுக்கு முன்பு நடந்த வாகன விபத்தில் விஜயன் என்பவர் உயிரிழந்தார். இதனை அடுத்து விசாரணைக்காக சடையனேந்தல் கிராமத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பழனிவேல் ராஜனை அபிராமம் காவல்துறையினர் அழைத்து சென்றனர்.
நேற்று இரவு காவல் நிலையத்தில் நடந்த விசாரணையின் போது அபிராமம் காவலர்கள் பழனிவேல்ராஜனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பழனிவேல்ராஜன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
பலத்த காயங்களோடு கமுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பழனிவேல்ராஜன் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த சடையனேந்தல் கிராம மக்கள் கமுதி காவல்நிலையத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது
விசாரணைக்காக அழைத்து சென்றவர் காவல் நிலையத்தில் தற்கொலை முயற்சி!
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Reviewed by நாட்டுப்புற நாதன்
on
July 24, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.