July 10, 2016
பலரை ஏமாற்றி திருமணம் செய்த அனுசுயா இன்ஜினியரை மணந்தபோது சிக்கினார்
பலமுறை திருமணம் செய்ததை மறைத்து, 7வதாக இன்ஜினியரை மணம்செய்த இளம்பெண் போடி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். தேனி மாவட்டம், போடியைச் சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மகன் பாண்டி, அமெரிக்காவில் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவருக்கும், கரூர் ராமகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த அனுசுயா என்ற அன்புபிரியாவிற்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இரு குடும்பத்தார் சம்மதத்துடன் 22.11.2015ல் தேனி அருகே உள்ள வீரபாண்டியில் திருமணம் நடந்தது. இருவரும் சென்னையில் குடியேறினர். மனைவியையும் அமெரிக்கா அழைத்துச் செல்வதற்காக பாண்டி ஏற்பாடு செய்து வந்தார். அனுசுயா தனது கணவரிடம் அடிக்கடி நகைகள் வாங்கித் தருமாறு வற்புறுத்தியுள்ளார். பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து தனது பெற்றோரிடம் தெரிவிக்க சில தினங்களுக்கு முன் பாண்டி போடி வந்தார். நேற்றுமுன்தினம் அவரை தொடர்பு கொண்ட அனுசுயா, ‘உடனே சென்னை வரவில்லையென்றால் வீட்டில் தர்ணா செய்வேன்’ என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாண்டி அன்று மாலையே சென்னை சென்றார். அதற்குள், சென்னையில் இருந்து கிளம்பிய அனுசுயா நேற்று காலை போடி வந்தார். சென்னையில் வீட்டுக்கு சென்ற பாண்டி, மனைவியைக் காணாததால், அவரது சூட்கேஸை தேடிப் பார்த்தார். அப்போது, அவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. இதுகுறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவித்து அவரும் நேற்று போடி வந்தார். இதற்கிடையே, தனது மகனை ஏமாற்றி திருமணம் செய்ததாக பாண்டியின் பெற்றோர் போடி போலீசாரிடம் அனுசுயாவை ஒப்படைத்தனர். அனுசுயா யார், அவரது பெற்றோர் யார், ஏற்கனவே திருமணம் நடந்தது உண்மைதானா என போடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாண்டியின் வழக்கறிஞர் அழகேசன் கூறுகையில், ‘‘அனுசுயா பலரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். திருச்சியில் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக 2011ல் திருச்சி காவல்நிலையத்தில் அவர் மீது வழக்கு பதிந்துள்ளனர். விருதுநகரில் தீபக் என்பவரை பதிவுத் திருமணம் செய்துள்ளார். இதற்கான ஆவணங்களை போலீசில் ஓப்படைத்துள்ளோம். இதுவரை ஆறு முறை திருமணம் செய்ததாக தெரிகிறது. ஏழாவது முறையாக பாண்டியை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்,’’ என்றார். அனுசுயாவிடம் கேட்டபோது, ‘மாப்பிள்ளையின் பெற்றோர் என்மீது அபாண்டமாக குற்றம்சாட்டி புகார் கொடுத்துள்ளனர்’ என்றார்.
பலரை ஏமாற்றி திருமணம் செய்த அனுசுயா இன்ஜினியரை மணந்தபோது சிக்கினார்
Reviewed by மறத்தமிழன்
on
July 10, 2016
Rating: 5
Reviewed by மறத்தமிழன்
on
July 10, 2016
Rating: 5
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.