Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

சிறுமியை திருமணம் செய்த பாரதீய ஜனதா தலைவர் மகன்


ஜார்கண்ட் மாநிலம் பாரதீய ஜனதா தலைவர் தலா மராண்டி இவரது மகன் முன்னா மராண்டி 2 வருடமாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்ததாகவும்,  மேலும் இந்த வாரம் வேறு ஒரு சிறுமியை அவர் திருமணம் செய்து கொண்டதாகவும் புகார் எழுந்து உள்ளது.

முன்னா மராண்டி மீது கோட்டா  மாவட்ட நீதிமன்றத்தில் ஒரு பெண் புகார் மனு அளித்து உள்ளார். அதில் அவர தன்னை 2 தைருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடந்த 2 வருடமாக பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். ஆனால் அவர் என்னை ஏமாற்றி விட்டார்.எனக்கு ஒரு மொபைல் போன் பரிசளித்தார். என்னை பாலியல் தேவைக்காக பயன்படுத்தினார். என கூறி உள்ளார்.

மேலும் அந்த பெண் ஜார்கண்ட் மகளிர் ஆனையத்திலும் புகார் அளித்து உள்ளார். அவரது மனு மீது நடவடிக்கை எடுப்பதாக ஆனையத்தலைவர் மகுவா மஞ்சி கூறி உள்ளார்.

முன்னா மராண்டிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை திருமணம் நடந்தது. அவர் 11 வயது சிறுமி ஒருவரை திருமணம் செய்து உள்ளதாக புகார் எழுந்து உள்ளது.

இந்த 2 புகாரின் பேரிலும் மகளிர் ஆனையம் முன்னா மராண்டிக்கு சம்மன் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.