Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

முகத்தில் இருக்கும் கருமையைப் போக்க வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்வது எப்படி?


ப்ளீச்சிங் #2 சந்தனம், எலுமிச்சை, தக்காளி, வெள்ளரிக்காய் 1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பவுடர், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தக்காளி சாறு, 1டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
ப்ளீச்சிங் #3 ஆரஞ்சு தோல் மற்றும் பால் ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்திப் பொடி செய்து, பால் சேர்த்து பேஸ்ட் போல் கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #4 தேன் மற்றும் பாதாம் 1 டேபிள் ஸ்பூன் தேனுடன், 1 டேபிள் ஸ்பூன் பாதாம் பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #5 வெள்ளரிக்காய், கிளிசரின், ரோஸ் வாட்டர் மற்றும் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாறு, 1/2 டேபிள் ஸ்பூன் கிளிசரின், 1/2 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #6 முட்டை வெள்ளைக்கரு மற்றும் எலுமிச்சை சாறு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் எலுமிச்சை சாற்றினை சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், நீரில் கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #7 எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் 2 டேபிள் ஸ்யூன் எலுமிச்சை சாற்றில், 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, நீரில் கழுவ வேண்டும். பின் சருமம் வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.
ப்ளீச்சிங் #8 தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறு 2 டேபிள் ஸ்பன் தக்காளி சாற்றுடன், 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து 10 நிமிடம் கழுத்து கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #9 வெள்ளை வினிகர் 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகருடன் 1 டேபிள் ஸ்பூன் நீர் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
ப்ளீச்சிங் #10 ப்ளீச்சிங் பவுடர், ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அம்மோனியா 1 டேபிள் ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடருடன், 1/2 டேபிள் ஸ்பூன் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் 1/2 டீஸ்பூன் அம்மோனியா சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10-15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி, சுத்தமான துணியால் முகத்தைத் துடைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.