பாஜக மாநிலங்களவை உறுப்பினரான நவ்ஜோத் சிங் சித்து, தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளராக அவர் நிறுத்தப்படுவார் என அரசியல் அரங்கில் பரபரப்பாகப் பேசப்பட்டநிலையில், அவர் தனது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருப்பது பல யூகங்களுக்கு விதை போட்டிருக்கிறது.
ராஜினாமா கடிதத்தை அனுப்பும் முன்னர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சித்து அளித்த பேட்டியில், “பஞ்சாப் மாநில மக்கள் மாற்றத்தை எதிர்நோக்குகின்றனர்” என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது அமிர்தசரஸ் தொகுதியில் அருண் ஜேட்லிக்கு விட்டுக் கொடுக்கும்படி தலைமையால் சித்துவிடம் கோரிக்கை வைக்கப்பட்டது, இதனால் சித்து தேர்தலில் நிற்க முடியாமல் போனது. இது அவருக்கு மன உளைச்சலை தந்ததாகக் கூறப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக அமிர்தசரஸ் தொகுதியில் எம்.பி.யாக பொறுப்பு வகித்த சித்து, அருண் ஜேட்லிக்காக விட்டுக் கொடுத்தார். ஆனால் அருண் ஜேட்லி தோல்வியடைந்து அந்த தொகுதியையே பாஜக விட்டுக் கொடுத்துவிட நேர்ந்தது.
இதனிடையே தனது கணவரின் ராஜினாமா முடிவை அடுத்து சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுரும் தனது நியமன எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார். விரைவில் இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இணைவார்கள் என டெல்லி அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.