வீடுகளில் அழகுக்காக வளர்க்கப்படும் மயில் புறாவை வளர்த்து இணையதளம் மூலம் வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகிறார் சிவகங்கை மாவட்டம், இளையான்குடியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர்.
இளையான்குடி அருகே உள்ள கலைக்குளத்தைச் சேர்ந்தவர் அமல்ராஜ். விவசாயியான இவர் விவசாயம் செய்வதுடன் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார். இவரது மகன் பெர்க்மான்ஸ்(25). இவர் பி.எஸ்சி. (ஐடி) படித்து முடித்துள்ளார். தற்போது அரசுப் போட்டித் தேர்வுகளுக்காகப் பயிற்சி மையத்தில் படித்து வருகிறார். இத்துடன் பறவைகள் வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதுடன் அதன் மூலம் வருமானத்தையும் ஈட்டுகிறார். இதன் மூலம் பெற்றோருக்கு கஷ்டத்தைக் கொடுக்காமல், போட்டித் தேர்வுக்கான செலவுகளை ஈடுகட்டி வருகிறார்.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் பெர்க்மான்ஸ் கூறியதாவது:
கலைக்குளம் கிராமத்தில் பள்ளிப் படிப்பையும், மதுரையில் கல்லூரிப் படிப்பையும் முடித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். தற்போது டிஎன்பிஎஸ்சி, வங்கி போட்டித் தேர்வுகளுக்காகத் தயாராகி வருகிறேன். இதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வருகிறேன். அதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பது மயில் புறா வளர்ப்புதான்.
கேரளம், கர்நாடக மாநிலங் களில் வீடுகளில் அழகுக்காக மயில் புறா வளர்ப்பதில் ஆர்வம் காட்டுவார்கள். இது பார்ப்பதற்கு மயில் போன்று தோகையை விரித்து ஆடும். இதில் இண்டியன் பேன்டைல், அமெரிக்கன் பேன்டைல், பெல்ஜியம் டைல் மார்க் எனப் பல்வேறு வகைகள் உள்ளன. உடல் முழுவதும் கருப்பு, வெள்ளை நிறத்தில் இந்த வகைப் புறாக்கள் உள்ளன. உடல் வெள்ளை நிறத்திலும் தோகை மட்டும் பிரவுன், கருப்பு நிறத்தில் இருக்கும் புறாக்களுக்கு விலை அதிகம் கிடைக்கும்.
தோகை எண்ணிக்கை 20 முதல் 50 வரை இருக்கும். தோகையின் எண்ணிக்கைக்கு ஏற்ற வகையில் விலை கிடைக்கும். குறைந்தபட்சம் ஒரு ஜோடி ரூ.1,500 முதல் ரூ.5,000 வரை விற்பனையாகின்றன. இதை இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறேன். பல அரிய வகை புறாக்களை கேரளம், பெங்களூருவில் இருந்து தேடி வந்து வாங்கிச் செல்கின்றனர் என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.