Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

படக்கதை: ஐபோனை திருட முயன்ற பைக் கொள்ளையர்களின் முயற்சி பலித்ததா?


லண்டன் நகரில் நடைபாதையில் வந்து கொண்டிருந்த நபரின் விலையுயர்ந்த ஐபோனை திருட முயன்ற பைக் கொள்ளையர்களின் முயற்சி பலித்ததா? என தெரிந்து கொள்ள உள்ளே வாருங்கள்!

லண்டன் நகரின் வடபகுதியில் உள்ள முஸ்வெல் ஹில் பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை ஒரு வாலிபர் தனது காதுகளில் ஹெட்போனை மாட்டியபடி, ஐபோன் மூலம் ‘வாட்ஸ்அப்’பில் மூழ்கிப் போனவராய் நடைபாதை வழியாக வந்து கொண்டிருந்தார்.



அந்த வாலிபரின் கவனம் ‘வாட்ஸ்அப்’பில் முற்றிலுமாக பதிந்திருந்ததால் அவரது ஐபோனை சுலபமாக பறித்து விடலாம் என எண்ணிய அப்பகுதி பைக் கொள்ளையர்கள் தங்களது ‘வெஸ்பா’ ஸ்கூட்டரை நடைபாதையின்மீது ஏற்றி அந்த வாலிபரை நெருங்கி வந்தனர்.



ஸ்கூட்டரின் பின்னால் இருந்த நபர் அந்த வாலிபரின் கையில் இருந்த ஐபோனை பறித்தார். ‘கைக்கு எட்டியது பாக்கெட்டுக்கு போகாத’ குறையாக கொள்ளையனின் கையில் இருந்து நழுவிய ஐபோன் கீழேவிழ, அதற்குள் அந்த ஸ்கூட்டர் அந்த இடத்தை கடந்து சென்று விட்டது.







ஏமாந்த வாலிபரிடம் இருந்து ஐபோனை கொள்ளையடிக்கும் தங்களது கூட்டாளிகளின் திட்டம் வெற்றியடைந்ததா? என ஒருகாரின் மறைவில் பைக்கில் அமர்ந்தபடி நோட்டமிட்ட மேலும் இரு கொள்ளையர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.



இந்நிலையில், தனது ஐபோனை கொள்ளையர்கள் பறிக்க முயன்றதுபற்றி சற்றும் பதற்றப்படாத அந்த வாலிபர் கீழேகிடந்த ஐபோனை எடுத்து, ஹெட்போனை காதில் சொருகியவராய் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் தனது நடையை தொடர்ந்தார். இந்த காட்சிகள் அனைத்தையும் அவ்வழியாக காரில் வந்த ஒருவர் தனது கேமராவில் சிறைப்படுத்தியுள்ளார்.

இதைத்தான், நம்மூரில் ‘அள்ளப் போனாலும் அதிர்ஷ்டம் வேணும்; திருடப் போனாலும் தெ(தி)சை வேணும்’ என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்தனரோ..,?

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.