Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 28, 2016

உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு


உடலை அழகாக வைத்துக் கொள்ள கடலை மாவு
அக்காலத்தில் பெண்கள் அனைவரும் அழகாக இருப்பதற்கு காரணம் என்னவென்று தெரியுமா? அவர்கள் கெமிக்கல் இல்லாத பொருட்களைக் கொண்டு, உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான், உடலைப் பராமரித்து வந்தார்கள். அந்த பொருட்களாவன மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பயித்தம் பருப்பு மாவு போன்ற பல. அதனால் தான் வீட்டில் உள்ள பாட்டிகள் குளிக்கும் போது மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை பயன்படுத்தி குளிக்குமாறு சொல்கிறார்கள்.
maaa
ஏனெனில் அவற்றில் பல அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் பஜ்ஜி சுடுவதற்கு பயன்படும் கடலை மாவானது ஒரு பாரம்பரிய இந்திய அழகுப் பொருள். இந்த பொருளைக் கொண்டு உடலைப் பராமரித்து வந்தால், பிம்பிள், சரும வறட்சி மற்றும் அதிகப்படியான எண்ணெய் பசை, சருமத்தில் இருக்கும் கருமைகள் மற்றும் பொலிவிழந்த கூந்தல் போன்ற பலவற்றை சரிசெய்ய முடியும்.
இப்போது உடலில் உள்ள பிரச்சனைகளைப் போக்க கடலை மாவை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
கடலை மாவை தயிர் அல்லது ரோஸ் வாட்டருடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு மென்மையாக இருக்கும்.
சிலரது சருமத்தில் பிம்பிளானது அதிகம் இருக்கும். அத்தகைய பிம்பிளை போக்குவதற்கு பல பொருட்களைப் பயன்படுத்தி இருப்பார்கள். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. ஆனால் கடலை மாவில் சிறிது சந்தனப் பவுடர், மஞ்சள் தூள் மற்றும் பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவினால், நல்ல பலன் கிடைக்கும். அதிலும் இந்த முறையை வாரத்திற்கு மூன்று முறை செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.