தேசிய கட்சியின் மாவட்ட மகளிரணி செயலாளர் பணத்துக்காகப் பல திருமணங்களை செய்தவர் என்றும் அவர் தன்னிடமும் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பொழிச்சலூரை சேர்ந்த சௌகத் அலிகான் என்பவர் சென்னை மாநகர காவல்துறை அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்துள்ளார். அதில், "நான் பெங்களூருவில் குடியிருந்து வருகிறேன். கடந்த 2001ம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த சல்மா என்ற இளம்பெண் என்னுடைய வீட்டில் வீட்டு வேலைக்காக சேர்ந்தார். அவருக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2002ம் ஆண்டில் சென்னையில் உள்ள உறவினர்கள் வீட்டில் தன்னை விட்டுவிடும்படி என்னிடம் தெரிவித்தார். அதன்படி நானும் அவரையும், அவரது மகளையும் சென்னைக்கு அழைத்து வந்தேன்.
இதன்பிறகு போனில் என்னிடம் அடிக்கடி பேசுவார். அப்போது, வறுமையில் வாடுவதாகத் தெரிவிப்பார். இதனால் அவருக்கு பல உதவிகளை செய்துள்ளேன். இந்நிலையில் என்னுடைய பெயரை கணவர் என்று குறிப்பிட்டு பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதற்கு அவர், என்னுடன் திருமணம் நடந்ததாக போலி ஆவணம் தயாரித்துள்ளார். தற்போது சல்மா சென்னையில் வசித்து வருகிறார். கடந்த 2013ல் ஸ்டீபனை திருமணம் செய்துள்ளார். தற்போது இருவரும் சேர்ந்து என்னிடம் பணம் பறிக்கும் நோக்கில் செயல்படுகின்றனர். பணம் கொடுக்கவில்லை என்றால் என்னை கேவலப்படுத்தப்போவதாக மிரட்டுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து சௌகத் அலிகான் கூறுகையில், "சென்னையில் சல்மா தங்கி இருந்த போது அவரது வீட்டுக்கு செல்வேன். அதைப் பயன்படுத்தி என்னை மிரட்டி பணம் பறித்து வருகிறார். என்னை விட்டு பிரிந்த அவர், ஸ்டீபன் என்பவரை திருமணம் செய்துள்ளார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. மேலும், பணத்துக்காக அவர் பலரை திருமணம் செய்துள்ள தகவலும் உள்ளது.அப்படித்தான் என்னையும் அவர் ஏமாற்ற நினைத்து செய்லபடுகிறார்.சல்மா, ஒரு தேசிய கட்சியில் மாவட்ட மகளிரணி செயலாளராக உள்ளார்.
அதைப் பயன்படுத்தி என்னிடமிருந்து பல லட்சம் ரூபாய், நகைகளை அபகரித்துக் கொண்டார். அதன் பிறகும் என்னிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகிறார். இதனால் தான் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளேன்" என்றார்.இந்த குற்றச்சாட்டு குறித்து சல்மாவின் செல்போனில் தொடர்பு கொண்ட போது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.