அசாம், திரிபுரா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெய்த கனமழையால் சாலைகள் சேதமடைந்ததையடுத்து அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக அசாம்-திரிபுரா எல்லையிலுள்ள தேசிய நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால் அச்சாலை வழியே செல்ல முடியாமல் நூற்றுக்கணக்கான வாகனங்கள் 3 நாட்களாக காத்துக்கிடக்கின்றன. இந்நிலையில், அங்கு தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.300 வரையிலும், டீசல் லிட்டருக்கு ரூ.150 வரையும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால், அங்கு பெட்ரோல் பல்க்குகளுக்கு முன் டயர்களை எரித்து வாகன ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தினர்.
பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க 2 லட்சம் லிட்டர் பெட்ரோல் நாளைக்குள் விநியோகிக்கப்படும் என வட பிராந்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பெட்ரோல் தட்டுப்பாட்டை சமாளிக்க 2 லட்சம் லிட்டர் பெட்ரோல் நாளைக்குள் விநியோகிக்கப்படும் என வட பிராந்திய மாவட்ட மாஜிஸ்திரேட்டு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.