Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

கோபத்திற்கு காரணமாகும் தூக்கம்: ஆய்வில் எச்சரிக்கை!


நித்திரைக் குழப்பம் மற்றும் அதிக நேரம் தூங்குதல் போன்றன கோப வியாதிக்கு காரணமாகலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

போதியளவான தூக்கமின்மையானது லண்டன் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களினால் தொற்று நோயாக கருதப்படுகிறது.

உணவு முறை, உடற்பயிற்சியுடன் ஒன்று சேர்ந்து நித்திரை பழக்கவழக்கமும் உருவரின் உடல் நிலையை பாதிக்கின்றது என Michael Irwin சொல்கிறார்.

பொதுவான நித்திரை குழப்பம், தூக்கமின்மை அழற்சிகளை ஏற்படுத்தி, மரணங்களுக்கும் காரணமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.

கோபமானது குருதியில் C-reactive protein (CRP), Interleukin-6 (IL-6) இன் அளவை கூட்டுகின்றது.

இவ்வாறான பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு, இதய ஆரோக்கியத்திற்கு கேடாகின்றது.

அத்துடன் இவை உயர் குருதியமுக்கம், வகை - 2 நீரிழிவு நோய்களையும் ஏற்படுத்துகின்றது.

சாதாரண நித்திரைக் கால அளவு 7 - 8 மணித்தியாலங்கள் வரையாகும்.

இதைவிட குறைவான மற்றும் கூடுதலான தூக்கம் CRP, IL-6 இன் அளவு அதிகரிக்க காரணமாகின்றது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.