சியவன முனிவர் எதிர்பார்த்தது நடந்தது. முன்னோரு காலத்தில் அரச குலத்தினர்க்கும் அந்தண குலத்தினர்க்கும் கடும்பகை ஏற்பட்டது.
அந்தணர்கள் பூண்டோடு அழிக்கப்பட்டனர். கர்ப்பிணியான அந்தணப் பெண்களும் படுகொலை செய்யப்பட்டனர்.
எப்படியோ இந்த ஆபத்திலிருந்து ஒளரவ முனி வருடைய தாய் தப்பி ஒளரவ முனிவரைப் பெற்று எடுத்தாள்.
பல ஆண்டுகள் சென்றன. நடந்த உண்மைகள் ஒளரவ முனிவருக்கு தெரிந்தது.
கோபம் கொண்ட அவர், ""என் தவ வலிமையால் அரச குலத்தினையே அழிக்கிறேன் பார்,'' என்று சூளுரைத்தார்.
அவர் கோபத்தின் ஆற்றலைத் தாங்காமல் <<உலகமே அழிந்து விடும் போலத் தோன்றியது. அப்போது அவருடைய முன்னோர்கள் அனைவரும் அவர்முன் தோன்றினர்.
""குழந்தாய்! எதற்காக இப்படிக் கடுங்கோபம் கொண்டாய்? உன் கோபத்தைத் தாங்காமல் உலகமே அழிந்துவிடும் போல உள்ளதே,'' என்றனர்.
""எங்களை அரச குலத்தினர் கொடூரமாக அடித்துக் கொன்றார்கள். அதற்கு பழி தீர்க்கத்தானே இப்படிக் கோபத்துடன் உள்ளாய். அப்படி நடப்பதற்கு அரச குலத்தினர் காரணம் அல்ல... அதற்கு காரணம் நாங்கள்தான். எங்களுக்கு வாழ்நாள் காலம் எல்லையற்றதாக இருந்தது. விரைவில் சொர்க்கம் செல்ல நினைத்தோம். அதற்கு இந்த உடல் எங்களுக்குத் தடையாக இருந்தது. தற்கொலை செய்து உடலைப் போக்கினால் பாவம் ஆகுமே என்று அஞ்சினோம். அதனால்தான் உலகம் ஏற்கும் வண்ணம் அரச குலத்தினர் எங்களைக் கொன்று ஒழித்தனர். முன்னரே திட்டமிட்ட நிகழ்ச்சி இது. இதற்காக அப்பாவிகளான அரச குலத்தினரைக் கொல்வது நியாயம் ஆகாது,'' என்றார்கள்.
அமைதி அடைந்தார் ஒளரவர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.