Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 22, 2016

ஆந்திரா பள்ளியில் மர்மமாக மயங்கி விழும் மாணவர்கள்: விடுமுறை அறிவிப்பு


ஆந்திரா பள்ளியில் ஒரு வாரத்தில் 50 மாணவர்கள் மர்மமாக மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வருவதால் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் கினகாபவரம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு கடந்த 1 வாரமாக மாணவர்கள் திடீர் திடீரென மயங்கி விழுகிறார்கள். ஆரம்பத்தில் ஒருவர், 2 பேர் என மயங்கி விழுந்ததில் அதையாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

கடந்த 19–ந்தேதி ஒரே நாளில் 7 பேர் மயங்கி விழுந்தனர். இதுபற்றி அவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

நேற்று 17 மாணவர்கள் மர்மமாக மயங்கி விழுந்தனர். அவர்களுக்கு வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மயங்கி விழுந்த மாணவர்கள் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் உடல்நலம் தேறி வீட்டுக்கு திரும்பினார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று பள்ளியில் மருத்துவ முகாம் நடந் தது. அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்பட்டன.

மருத்துவ முகாம் நடை பெற்றுக் கொண்டிருந்த போதே மேலும் 10 மாணவர்கள் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. 10 மாணவர்களுக்கும் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த 1 வாரத்தில் மட் டும் 50–க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதனால் பள்ளிக்கு இன்று முதல் வருகிற திங்கட்கிழமை வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

26–ந்தேதி பள்ளியில் மனநல மருத்துவர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களும் பரிசோதனை நடத்த உள்ளனர். அதன் பிறகே பள்ளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.