முன்னணி இ-காமர்ஸ் நிறுவன மான அமேசான் 2 மணி நேரத்தில் டெலிவரி செய்யும் முறையை இந்திய நகரங்களில் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இ-காமர்ஸ் துறையில் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு இ-காமர்ஸ் நிறுவனங்களும் புதிய வசதிகளை அளித்து வருகின்றன. தற்போது பெங்களூருவில் இரண்டு மணி நேரத்தில் டெலிவரி வசதியை வைத்துள்ள அமேசான் இதை இந்தியாவின் பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கொல்கத் தாவில் நேற்று பேசிய அமேசான் இந்தியா நிறுவனத்தின் எப்எம்சிஜி பிரிவு தலைவர் செளரப் வாஸ்தவா, பெங்களூருவில் தற்போது இந்த முறையை பரிசோதித்து வருகிறோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. இந்த துறையில் அதிக நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் செயல்பட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். இதன் அடுத்த கட்டமாக அதிக மக்கள் தொகை கொண்ட மெட்ரோ நகரங்களில் கவனம் செலுத்த உள்ளோம் என்று குறிப்பிட்டார். ஆனால் எப்போது தொடங்கப்படும், எந்த எந்த நகரங்களில் தொடங்கப்படும் என்று குறிப்பிடவில்லை
அமேசான் நிறுவனம் இரண்டு மணி நேரத்தில் ‘கிரானா நவ்’ சேவையை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மளிகைப் பொருட்களுக்காக தொடங்கியது. பின்னர் இதன் பெயரை ‘அமேசன் நவ்’ என மாற்றியது. இந்த சேவைக்காக உள்ளுர் முன்னணி பிராண்டட் மளிகைக் கடைகளுடன் அமேசான் நிறுவனம் இணைந் துள்ளது என்றும் வாஸ்தவா குறிப்பிட்டார்.
இரண்டு மணி நேரத்தில் டெலிவரி செய்யும் பொருட்களின் பட்டியலை தொடர்ச்சியாக அதி கரித்து வருகிறோம். சமீபத்தில் பழங்கள் மற்றும் காய்கறி களையும் இணைத்துள்ளோம். தொடர்ச்சியாக இந்த துறையில் உள்ள நடைமுறைகளை கவனித்து வருகிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.