Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

நடிகர் கமல் மருத்துவமனையில் அனுமதி: தவறி விழுந்ததால் அறுவை சிகிச்சை


நடிகர் கமல் ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.


நேற்று இரவு அவரது ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியிலிருந்து தவறி விழுந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக கமல் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், கமலுக்கு கால் மூட்டு மற்றும் முதுகு தண்டுவட பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறினர். இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

நடிகர் கமல் பூரண குணமடைய இரண்டு வாரங்கள் ஆகும் என்பதால் அவர் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.