Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 25, 2016

அப்துல் கலாமின் வெளிவராத கடிதம்


மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வெளி வராத கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.


2012-ம் ஆண்டு பிரதீபா பட்டீலுக்கு பிறகு அடுத்த ஜனாதிபதியாக அப்துல் கலாம் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று திரினாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் உணர்ச்சிகர கோரிக்கையை கலாம் தீவிரமாக பரிசீலினை செய்தார். ஆனால் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க முடிவு செய்ததது. ஒருவேளை மம்தாவின் கோரிக்கையை ஏற்று தேர்தலில் போட்டியிட முடிவு செய்தால், தனது முடிவு குறித்து மக்களுக்கு விளக்க ஒரு கடிதமும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் அந்த முடிவை பற்றி தெரிவிக்க ஒரு கடிதத்தையும் கலாம் எழுதி வைத்திருந்தார்.

தீவிர பரிசீலனைக்கு பிறகு, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்ற முடிவை கலாம் எடுத்தார். இதனையடுத்து அவர் எழுதிய இரண்டாவது கடிதம் ஊடகங்களில் வெளியானது. ஆனால் முதல் கடிதம் பற்றி யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. இந்நிலையில் கலாமின் உதவியாளர் ஸ்ரீஜன் பால் சிங்கின் புத்தகத்தில் மேற்குரிய இரண்டு கடிதமும் இடம்பெற்றுள்ளது.

அதில், மறைந்த மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதாவது,

“ டியர் இந்தியன்ஸ்...உங்களின் ஆதரவுடன் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளேன். எண்ணிக்கை (எம்.பி.களின் ஆதரவு) எனக்கு எதிராக இருப்பதை தெரிந்தே போட்டியில் நுழைகிறேன். அருதி பெரும்பான்மை கிடைக்காது, தோல்வியடை போகிறேன் என்று தெரிந்தே களமிறங்க முடிவு செய்துள்ளேன். ஆனால் நான் ஏற்கனவே மக்களின் இதயங்களை வென்றுவிட்டேன், இந்த தேர்தலில் போட்டியிடுவது என் கடமை.

நான் எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தவன் இல்லை. குறிப்பிட்ட அரசியல் சித்தாந்தத்தை ஆதரிக்கவோ, எதிக்கவோ இல்லை. நான் ஒரு சாதாரண விஞ்ஞானி. நான் ஒரு ஆசிரியராக நினைவுக்கூரப்படுவதையே விரும்புகிறேன்.

நான் தேர்தலில் போட்டியிட முடிவு செய்துவிட்டேன். எனவே தற்போது நான் ஒரு வேட்பாளர். ஒரு வேட்பாளர் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். எனக்கு ஒரு கட்சியின் ஆதரவோ, செல்வாக்குமிக்க குழுவின் ஆதரவோ இல்லை. எனவே அன்புக்குரிய இந்தியர்களே.. எனக்காக நீங்கள் பிரசாரம் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பது கூட்டு முடிவு. இப்போது நான் மக்களின் வேட்பாளர். நான் வெற்றிப்பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், எப்போதும் போல் என் மீது அன்பை பொழிவீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நான் தோற்க நேரிடலாம், எனக்கு தெரியவில்லை. ஆனால் உங்களிடம் நான் உண்மையாகவும், விசுவாசமாகவும், பாசமாகவும் இருக்கிறேன் என்பது மட்டும் நன்றாக தெரியும்

இது ஒரு அரசியல் அறிக்கையோ அல்லது தேர்தலுக்கான தாரக மந்திரமோ இல்லை. இவை என்னுடைய இதயத்திலிருந்து நேரடியாக வரும் சில வார்த்தைகள்” என்று கூறி கீதையிலிருந்து ஒரு வாசகத்தை மேற்கோள்காட்டி அந்த கடிததை முடித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.