Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 9, 2016

ஆதார் அட்டை இல்லாதோருக்கு கேஸ் மானியம் நிறுத்திவைப்பு: பொதுமக்கள் அதிர்ச்சி


ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு சமையல் எரிவாயு மானியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வாரமாகவே ஆதார் அட்டை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சமையல் கேஸ் மானியம் வழங்கப்படவில்லை. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகஸ்தர்கள் தரப்பில், "வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வங்கி மற்றும் கேஸ் ஏஜென்சிகளில் வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் ஆதார் அட்டை விவரத்தை வழங்கவிட்டால் கேஸ் மானியத்தை நிறுத்த எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன.

எனவே, வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆதார் அட்டையை பெறுவதை வலியுறுத்தும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 87% பேர் ஆதார் அட்டை வைத்துள்ளனர்:

தமிழகத்தில் மட்டும் 7.1 கோடி மக்களில் 6.30 கோடி மக்கள் ஆதார் அடையாள அட்டை பெற்றுள்ளனர். சென்னையை பொருத்தவரை 70% மக்கள் ஆதார் அடையாள பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.