Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 5, 2016

எட்டாவது மாடியில் நிர்வாணமாக ஏசியை பிடித்து தொங்கிய வாலிபர்... ஏன் தெரியுமா?


தமிழ் திரைப்படங்களில் கள்ளக்காதல் சம்பவங்கள் பற்றிய சீன் வைக்கும் போது அந்த பெண்ணின் கணவர் திடீரென வந்து விட்டால் பரண் மீதோ, கட்டிலுக்கு அடியிலோ பதுங்கிக் கொள்வார்கள்.

சைனாவில் காதலியுடன் உல்லாசமாக இருந்தபோது காதலியின் கணவர் வந்ததால் தப்பிக்க முயற்சித்த காதலன் நிர்வாண கோலத்தில் ஏசியை பிடித்துக் கொண்டு தொங்கிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

எட்டாவது மாடியில் எந்த உடையும் இன்றி ஒருவாலிபர் நிர்வாணமாக தொங்கிக்கொண்டிருந்தால் எப்படி இருக்கும்? அதை பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி ஏற்படாதா என்ன? கடவுளே... கடவுளே என்று கூறியவாரே அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி விட்டார்கள்.

இவர் தனது காதலியுடன் உல்லாசமாக இருந்த போது அந்த பெண்ணின் கணவர் வந்து விட்டதால் இவர் தப்பித்து ஏசியைப் பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தாரா? அல்லது காதலியின் கணவர் வீட்டுக்குள் வந்ததை அறிந்து தப்பிப்பதற்காக ஏசியை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்தாரா? போன்ற தகவல்கள் வெளியாகவில்லை.

அதே நேரத்தில் நிர்வாண கோலத்தில் ஏசி-யை பிடித்து தொங்கிக் கொண்டு இருந்ததைப் பார்த்த அந்த வழியே சென்றவர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக்கி விட்டனர். பாவம் தப்பிக்க நினைத்து இப்போது அனைவரின் கண்களிலும் காமிராக்களிலும் வகையாக சிக்கிக் கொண்டார் இந்த வாலிபர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.