சேலம் மாவட்டம் களரம்பட்டியைச் சேர்ந்தவர் பூங்காவனம். இவரது மனைவி செல்லம்மாள். கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பூங்காவனத்தின் தம்பி முருகன், தனது அண்ணிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தார். தனது ஆசைக்கு இணங்குமாறு வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் சேலத்தை விட்டு இடம் பெயர்ந்து நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார் செல்லம்மாள்.
ஆனால், முருகன் அங்கு சென்றும் தன்னுடன் வந்து விடுமாறு செல்லம்மாளை வற்புறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கத்தியை எடுத்து செல்லம்மாளை சரமாரியாக குத்தினார் முருகன்.
இதில் செல்லம்மாளின் உடலில் 11 இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்தம் கொட்டிய நிலையில், வலியால் துடித்த செல்லம்மாள், ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.