Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

உலகிலேயே மிக வயதான சிறைக்கைதி வங்கதேசத்தில் விடுவிப்பு


வங்க தேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச் சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார்.

நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது.

ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது.

ஆயுள் தண்டனையில் 20 ஆண்டுகள் சிறைவாசத்தை அவர் அனுபவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.