Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 11, 2016

உத்தரகாண்டில் சிறுத்தையுடன் சண்டையிட்ட பெண்


உத்தரகாண்டில் சிறுத்தையுடன் சண்டையிட்ட பெண் காயத்துடன் உயிர் தப்பினார்.

உத்தரகாண்ட் மாநிலம் பைதோராகார்க் மாவட்டம் சன்யாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பிரேமாதேவி. இவர் வீட்டின் மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது நைசாக வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று, பிரேமா இருந்த அறைக்குள் நுழைந்து அவரை தாக்க பாய்ந்தது.

சிறுத்தையை பார்த்து அதிர்ச்சி அடைந்த பிரேமாதேவி, தைரியமாக அருகில் கிடந்த கம்பை எடுத்து சிறுத்தையுடன் சண்டை போட்டார். அப்போது சிறுத்தை அவரை தாக்கியதில் முகம் மற்றும் கழுத்து பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது. அதற்குள் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வந்து சிறுத்தையை விரட்டி அடித்தனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.