ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர் கைதானது பற்றி மேற்கு வங்காள போலீசார் திருப்பூரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இவர் திருப்பூரில் கைத்துப்பாக்கியுடன் சுற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.
ஐ.எஸ். இயக்கத்தை சேர்ந்தவர்
மேற்கு வங்காள மாநிலம் புர்துவான் ரெயில் நிலையத்தில் உளவுத்துறை போலீசார் முகமது மொசுருதீன் (வயது 28) என்பவரை கடந்த 3 நாட்களுக்கு முன் கைது செய்தனர். இவர் தடை செய்யப்பட்ட ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர் ஆவார். முகமது மொசுருதீனின் சொந்த ஊர் மேற்கு வங்காள மாநிலம் பிர்பாம் மாவட்டத்தை சேர்ந்த லாப்பூர் ஆகும்.
இவர் கடந்த 6 ஆண்டுகளாக திருப்பூர் மங்கலம் ரோடு ஆண்டிப்பாளையம் கோழிப்பண்ணை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து மளிகை கடை வைத்து வியாபாரம் நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து மேற்கு வங்காள மாநில உளவுத்துறை போலீசார் மத்திய புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி கோவை புலனாய்வு பிரிவு போலீசார், திருப்பூர் மத்திய போலீசார் உதவியுடன் திருப்பூர் கோழிப்பண்ணையில் உள்ள முகமது மொசுருதீனின் மளிகை கடை மற்றும் அவரது வீட்டில் கடந்த 2 நாட்களுக்கு முன் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டில் இருந்து ஒரு மடிக்கணினி, 2லு அடி நீள கத்தி மற்றும் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் கைப்பற்றினார்கள்.
மேற்கு வங்காள போலீசார் விசாரணை
வீட்டில் இருந்த முகமது மொசுருதீனின் மனைவி சாயிரா பானு (25), முகமது மொசுருதீனின் தம்பி அசுதுல்லா (23), நண்பர் ஷாநவாஸ் (20) ஆகியோரிடமும் புலனாய்வு பிரிவு போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், முகமது மொசுருதீன் ஐ.எஸ். இயக்கத்தோடு தொடர்பு வைத்திருந்த தகவல்கள் தங்களுக்கு தெரியாது என்று சாயிரா பானு மற்றும் அசுதுல்லா ஆகியோர் தெரிவித்தனர். மேலும் திருப்பூரை அடுத்த மங்கலத்தில் தங்கியிருந்த முகமது மொசுருதீனின் அண்ணன் முகமது லினாசுருதீனிடமும் (30) போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் மேற்கு வங்காள மாநில உளவுத்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுஸ் தலைமையிலான போலீசார் திருப்பூர் வந்தனர். நேற்று காலை முகமது மொசுருதீனின் மனைவி சாயிரா பானு, முகமது லினாசுருதீன் ஆகியோரை திருப்பூர் மத்திய போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் முகமது மொசுருதீன் நடத்தி வந்த மளிகை கடை மற்றும் அவர் குடியிருந்த வீடு ஆகியவற்றை சப்-இன்ஸ்பெக்டர் கவுஸ் பார்வையிட்டு சோதனை நடத்தியதுடன் தனது செல்போனில் புகைப்படமும் எடுத்துக்கொண்டார். மேலும் அங்கிருந்த முகமது மொசுருதீனின் தம்பி அசுதுல்லாவிடமும் அவர் விசாரணை நடத்தினார்.
ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்தாரா?
முகமது மொசுருதீன் வீட்டில் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி மற்றும் கத்தி ஆகியவற்றை திருப்பூர் போலீசார், மேற்கு வங்காள மாநில உளவுத்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர். முகமது மொசுருதீன் மடிக்கணினி உதவியுடன் முகநூல் (பேஸ்புக்) மூலமாக ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அவர் வைத்திருந்த செல்போன் எண் அழைப்புகளை போலீசார் கண்காணித்தபோது சிரியாவுக்கும், மேற்கு வங்காளத்தில் உள்ளவர்களுடனும் அடிக்கடி பேசி வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
முகமது மொசுருதீனை போலீசார் கைது செய்யும் போது கைத்துப்பாக்கி அவரிடம் இருந்துள்ளது. இதன்மூலம் அவர் திருப்பூரில் வீட்டில் இருந்தபோதும் கைத்துப்பாக்கியுடன் சுற்றி வந்துள்ளது தெரியவந்துள்ளது. தேவைப்படும் போது விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று முகமது மொசுருதீனின் குடும்பத்தினரிடம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
முகமது மொசுருதீன் திருப்பூரில் வசித்தபோது ஐ.எஸ். இயக்கத்துக்கு ஆட்களை சேர்த்தாரா?, அவர் யார்? யாருடன் அதிகமாக தொடர்பு வைத்திருந்தார்? உள்ளிட்ட விவரங்களை உளவுத்துறை போலீசார் சேகரித்து பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி உள்ளனர்.
மளிகை கடை பொருட்களை...
திருப்பூர் கோழிப்பண்ணையில் முகமது மொசுருதீன் வைத்திருந்த மளிகை கடையில் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் என ஒரு பெரிய கடைக்கு தேவையான பொருட்கள் இருந்தன. முகமது மொசுருதீன் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர் என்பதும், அவர் மேற்கு வங்காளத்தில் கைது செய்யப்பட்ட தகவலை அறிந்ததும், அவருடைய மளிகை கடைக்கு பொருட்களை ‘சப்ளை’ செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பொருட்களை கடைக்கு கொடுத்தவர்களில் சிலருக்கு முகமது மொசுருதீன் பணம் கொடுக்க வேண்டியிருந்தது. பலரிடம் வரவு-செலவு வைத்திருந்தார். நேற்று காலை சிலர் கடைக்கு வந்து, தாங்கள் ‘சப்ளை’ செய்த பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்றார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.