Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 21, 2016

ரிலையன்ஸ் ஜியோ வருகையால் மற்ற நெட்வொர்க்குகளின் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் குறைய வாய்ப்பு



பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் வர்த்தக ரீதியில் 4ஜி இண்டர்நெட் சேவையை துவங்க உள்ளது. தற்போது முதற்கட்டமாக LYF பிராண்ட் மொபைல்களுடன் முதல் 3 மாதங்களுக்கு இலவசமாக அன்லிமிடெட் 4ஜி இண்டர்நெட் ஆஃபரையும் ஜியோ வழங்கி வருகிறது.

ஜியோ வர்த்தக ரீதியில் சேவையை துவங்கும் பட்சத்தில் மற்ற தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் இண்டர்நெட் டேட்டா கட்டணங்கள் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக கடந்த சில வாரங்களாகவே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தனியார் மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் ஐடியா கணிசமான அளவில் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. மேலும், தற்போதைய கட்டணத்திலேயே 67 சதவீதம் வரை கூடுதலாக டேட்டாக்களை வழங்கவும் முடிவு செய்திருப்பதாக அவை தெரிவித்துள்ளன. இந்த வரிசையில் தற்போது வோடபோன் இந்தியா நிறுவனமும் இணைய உள்ளது. இன்னும் ஓரிரண்டு நாட்களில் மொபைல் இண்டர்நெட் டேட்டா கட்டணத்தை குறைக்க உள்ளதாக வோடபோன் இந்தியாவின் தலைமை நிர்வாகி சுனில் சூட் தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.