தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடன்களை திரும்ப செலுத்தாததால், அவரது சொத்துகளை ஏலம் விட்டு கடனை மீட்கும் நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. அவரது கிங் பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் ரூ.800 கடன் பாக்கி வைத்ததால், அவருக்கு சொந்தமான ஜெட் விமானத்தை கடந்த 2013–ம் ஆண்டு சேவை வரித்துறை முடக்கியது.
அந்த விமானம் மின்னணு முறையிலான ஏலத்துக்கு கொண்டுவரப்பட்டது. ஆரம்ப விலையாக ரூ.152 கோடி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், ஏலத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒரு விமான நிறுவனம் மட்டுமே பங்கேற்றது. அதுவும், வெறும் ரூ.1 கோடியே 9 லட்சத்துக்கு ஏலம் கேட்டது.
அந்த நிறுவனம், ஏல விதிமுறைகளின்படி, ஏற்கனவே ரூ.1 கோடியை டெபாசிட் செய்துள்ளது. இருப்பினும், அடிமாட்டு விலைக்கு கேட்டதால், அதன் கோரிக்கையை சேவை வரித்துறை நிராகரித்து விட்டது. இதனால், ஏல முயற்சி தோல்வி அடைந்தது. இனிமேல், உள்நாட்டு விமான நிறுவனங்கள் மட்டும் பங்கேற்கும் ஏலம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.