Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 13, 2016

குஜராத்தில் சாலையில் உல்லாசமாக சுற்றித் திரிந்த 8 சிங்கங்கள்: வீடியோ இணைப்பு


குஜராத் மாநிலத்தின் ஜுனகத் நகரில் மக்கள் குடியிருப்புக்கு அருகில் உள்ள சாலை ஒன்றில் 8 சிங்கங்கள் உல்லாசமாக சுற்றித் திரிந்த காட்சிகள் வெளியாகியுள்ளன. குஜராத்தில் சாலையில் உல்லாசமாக சுற்றித் திரிந்த 8 சிங்கங்கள்: வீடியோ இணைப்பு அகமதாபாத்: குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜுனகத் நகரத்தின் சாலை ஓரத்தில் நேற்று இரவு 8 சிங்கங்கள் உல்லாசமாக நடந்து சென்றன. அதில் இரண்டு குட்டி சிங்கங்கள். அவ்வழியாக சென்ற சிலர் சிங்கங்களை கண்டு கடும் பீதி அடைந்தனர். குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் இந்த சிங்கங்கள் நடமாடியுள்ளது. இதேபோல், அம்ரேலி மாவட்டத்தில் மூன்று சிங்கங்கள் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்தார். சிங்கங்கள் எண்ணிக்கை அதிகமுள்ள கிர் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது அவர் சிங்கங்களால் தாக்கப்பட்டதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.