‘கிணற்றை காணோம்.. கிணற்றை காணோம்..’ என்னும் வடிவேலு காமெடி பாணியில் சென்னையில், மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியை காணாமல் பயணிகள் தவித்தனர்.
மங்களூரு எக்ஸ்பிரஸ்
சென்னை சென்டிரலில் இருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு தினமும் மாலை 5 மணிக்கு மங்களூரு எக்ஸ்பிரஸ் (வண்டிஎண்: 12685) ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை இந்த ரெயில் சென்டிரல் ரெயில் நிலைய 3–வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது.
முன்பதிவு செய்திருந்த பயணிகள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் ஏறி தங்களுக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டிருந்தனர். மாலை 4.30 மணி அளவில், முன்பதிவு பெட்டிகளில் பயணிகளின் பெயர் பட்டியலை ரெயில்வே ஊழியர் ஒருவர் வரிசையாக ஒட்டிக் கொண்டே வந்தார்.
பயணிகள் அதிர்ச்சி
அப்போது, எஸ்–12 பெட்டியை காணாமல் அவர் அதிர்ச்சி அடைந்தார். அவரது கையில், எஸ்–12 பெட்டியில் பயணம் செய்யும் பயணிகளின் பெயர் பட்டியல் இருந்தது. ஆனால், ‘கிணற்றை காணோம்.. கிணற்றை காணோம்..’ என்ற வடிவேலுவின் சினிமாபட காமெடியைப் போல், ரெயில் பெட்டியைத்தான் அங்கே காணவில்லை.
இதுபற்றி ரெயில்வே ஊழியர், ரெயில் நிலைய அதிகாரி உமா சங்கருக்கு தகவல் தெரிவிக்க அவர் நேரில் வந்து, விசாரணை மேற்கொண்டார்.
அப்போது ரெயில் புறப்படுவதற்கான நேரம் நெருங்கியது. அதனால், எஸ்–12 பெட்டியின் பயணிகள் 80 பேர், ரெயில் என்ஜினுக்கு அருகில் வந்து ரெயில்வே அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
என்ஜின் டிரைவரும் சூழ்நிலையை புரிந்துகொண்டு ரெயிலை கிளப்பவில்லை. நேரம் ஆக.. ஆக.. பொறுமை இழந்த மற்ற பயணிகள் ரெயிலை விட்டு இறங்கி பிரச்சினைக்கான காரணம் குறித்து கேட்டறிந்தனர்.
சமாதான பேச்சு
அவர்கள், ரெயில் பெட்டியை காணாமல் தவித்த பயணிகளுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். ‘உங்கள் 80 பேர் பிரச்சினைக்காக, ரெயிலில் இருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகளும் பாதிப்படைய வேண்டுமா?. எனவே ரெயிலை புறப்பட விடுங்கள்’ என்றனர்.
பிரச்சினை பெரிதாகிக் கொண்டே போவதை பார்த்த ரெயில்வே அதிகாரிகளும், பயணிகளுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ‘இந்த ரெயிலில் எஸ்–11 பெட்டிகள் வரைதான் உண்டு. ஆனால், முன்பதிவின்போது தவறுதலாக எஸ்–12 பெட்டி சேர்க்கப்பட்டுள்ளது. எனவே சற்று பொறுத்துக்கொண்டு, ஏனைய முன்பதிவு பெட்டிகளில் கொஞ்சம்.. கொஞ்சமாக.. ஏறிக்கொள்ளுங்கள். ரெயில் சேலம் சென்றதும், நிறைய பயணிகள் இறங்கி விடுவார்கள். அங்கு, காலியாகும் இடங்களை டிக்கெட் பரிசோதகர்கள் உங்களுக்கு ஒதுக்கித் தருவார்கள்’ என்று கூறினர்.
அதிகாரிகள் திட்டம்
ஆனால், எஸ்–12 பெட்டியில் பயணிக்க வேண்டிய பயணிகள், தங்களுள் ஒரு சிலரிடம் கைக்குழந்தைகள் இருந்ததை காரணம்காட்டி, அதை ஏற்க மறுத்தனர். இதனால் நேரம் ஆகிக் கொண்டிருந்ததே தவிர, ரெயில் புறப்படுவதற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. அப்போது ரெயிலில் இருந்து மேலும் பல பயணிகள் கீழே இறங்கி வந்து அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, மாலை 5.40 மணி அளவில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு முன்பதிவு பெட்டியை கொண்டு வந்து, மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலுடன் இணைத்து, பாதிக்கப்பட்ட பயணிகளை அந்த பெட்டியில் ஏற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி பேசின் பிரிட்ஜ் பணிமனையில் இருந்து டீசல் என்ஜின் மூலம் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த படுக்கை வசதி பெட்டி சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.
2 மணி நேரம் தாமதம்
அந்த பெட்டி மாலை 6.40 மணிக்கு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜினுக்கு அடுத்தபடியாக, முதல் பெட்டியாக இணைக்கப்பட்டது.
அதன்பின்னர், எஸ்–12 பெட்டியில் செல்ல வேண்டிய பயணிகள் அதில் ஏறி, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் அமர்ந்தனர். ரெயில்வே அதிகாரிகளும், அப்பாடா.. என்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். நீண்டநேர போராட்டத்திற்கு பிறகு இரவு 7 மணிக்கு மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
காரணம் என்ன?
முன்னதாக, எஸ்–12 பெட்டியில் பயணிக்க வேண்டிய முரளி கிருஷ்ணன் (வயது 40) என்ற பயணி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறும்போது, ‘‘இன்று (நேற்று) மதியம் 1.30 மணிக்குத்தான் எஸ்–12 பெட்டியில் படுக்கை வசதி ஒதுக்கப்பட்டிருந்ததாக எனக்கு எஸ்.எம்.எஸ். வந்தது. நானும் ரெயில் ஏற வந்தேன். ஆனால், எஸ்–12 பெட்டியை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்து ரெயில்வே அதிகாரிகளிடம் புகார் செய்தோம். அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல் நேரத்தை கடத்திக் கொண்டே இருந்தனர். இறுதியில் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் வேறு ஒரு ரெயில் பெட்டியை கொண்டுவந்து இணைத்தனர்’’ என்று வருத்தத்துடன் கூறினார்.
ரெயில்வே உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘ஞாயிற்றுக்கிழமை என்பதால் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணிக்க, காத்திருப்போர் பட்டியலில் அதிக பயணிகள் இருந்தனர். எனவே, பெட்டி ஒன்றை அதிகரித்து மேலும் 80 பயணிகளை கூடுதலாக ஏற்றிச் செல்ல ஏற்பாடு செய்தோம். ஆனால், தவறுதலாக ரெயில் பெட்டிதான் கூடுதலாக இணைக்கப்படவில்லை. அதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்’’ என்றார்.
இருந்தாலும், ரெயில் பெட்டி குளறுபடி குறித்து துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை முடிவிலேயே கூடுதல் பெட்டி இணைக்கப்படாததற்கான காரணம் தெரியவரும்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.