Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 18, 2016

துருக்கியில் அரசை கவிழ்க்க முயற்சித்த விவகாரத்தில் 6 ஆயிரம் பேர் கைது: நீதி துறை மந்திரி


இஸ்தான்புல்,

துருக்கியில் அரசை கவிழ்க்க திட்டமிட்டு செயல்பட்டவர்களில் 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என நீதி துறை மந்திரி பெகீர் போஜ்டக் இன்று கூறியுள்ளார்.

துருக்கியில் பிரதமர் பினாலி யில்டிரிம் தலைமையிலான அரசு நடந்து வருகிறது.  இந்நிலையில் துருக்கி நாட்டில் நேற்று திடீரென ராணுவ எழுச்சி ஏற்பட்டது.  அந்நாட்டு தலைநகர் அங்காராவிலும் மற்றும் இஸ்தான்புல் நகரிலும் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடுகள் மற்றும் குண்டு வெடிப்புகள் நடந்தன.

அங்காராவில் கிளர்ச்சியாளர்களின் ஹெலிகாப்டர் ஒன்று, படை வீரர்களால் சுட்டு வீழ்த்தப்பட்டது. எங்கு பார்த்தாலும் கலகங்கள் நடந்தன. மக்களிடையே பெரும் குழப்பம் நிலவியது. இந்நிலையில் நள்ளிரவு 12.45 மணிக்கு ராணுவ புரட்சிக்கு முயற்சித்த பிரிவில் ஒரு குழு, போலீஸ் படைகள் முன் சரண் அடைந்தது.

ராணுவ புரட்சி முயற்சியினால் ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் 265 பேர் கொல்லப்பட்டனர், 1,440 பேர் காயம் அடைந்தனர். புரட்சி முயற்சியில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகள், வீரர்கள் என 2,839 பேர் கைது செய்யப்பட்டனர்.

துருக்கி நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளிக்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூறினார்.  துருக்கியில் அமைதி திரும்ப வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ஐ.நா. சபையின் பொது செயலாளர் பான் கீ மூன் வலியுறுத்தினார்.

இந்த புரட்சியினை அமெரிக்காவை அடிப்படையாக கொண்ட துருக்கி மதபோதகர் பெதுல்லா குலென் செய்திருக்க வேண்டும் என துருக்கியின் ஜனாதிபதி எர்டோகன் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டின் அனடொலு என்ற செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், அரசின் நடவடிக்கைகள் தொடருகின்றன.  இதுவரை 6 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று நீதி துறை மந்திரி கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.