Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 1, 2016

கனடாவில் ஆற்றில் மூழ்கிய சிறுமியை தலைப்பாகையை வீசி, காப்பாற்றிய சீக்கியர்


கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் காம்லூப்ஸ் என்ற இடத்தில் வசித்து வருபவர் அவ்தார் ஹோத்தி. இவர் ஒரு சீக்கியர் ஆவார்.

சம்பவத்தன்று இவரும், இவரது மகன் பாலும் தங்களது பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தார்கள். அப்போது அந்தப் பண்ணை அருகில் உள்ள வடக்கு தாம்ப்சன் ஆற்றில் 14, 15 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் தவறி விழுந்து விட்டார். அந்தச் சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அவ்தார் ஹோத்தி ஓடிப்போய் பார்த்தார். அந்தச்சிறுமி, தண்ணீருக்குள் மூழ்கியவாறு, அலறிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

உடனே சமயோசிதமாய் அவர் தனது தலைப்பாகையை அவிழ்த்து அதன் ஒரு முனையை ஆற்றுக்குள் வீசினார். அந்தச் சிறுமி, தலைப்பாகை முனையை சரியாக பற்றிக்கொண்ட உடனே, அவர் தன்னிடம் இருந்த மற்றொருமுனையை பிடித்து இழுத்து சிறுமியை கரை சேர்த்து காப்பாற்றினார்.

இதுபற்றி பால் கூறுகையில், ‘‘எனது தந்தையை நினைத்து பெருமைப்படுகிறேன். அந்தச் சிறுமியைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது மரக்கிளை கிடைக்குமா என பார்த்த வேளையில், எனது தந்தை கொஞ்சம் கூட யோசிக்காமல் தனது தலைப்பாகையை அவிழ்த்து அதை ஒரு கயிறு போல கருதி வீசி, அந்தச் சிறுமியை இழுத்து காப்பாற்றி விட்டார். ஆற்றில் தண்ணீர் பனிக்கட்டி போல மிகவும் குளிராக இருந்தது’’ என குறிப்பிட்டார்.

சீக்கியர்கள் மத வழக்கப்படி தலைப்பாகையை அவிழ்த்து தங்களது தலைமுடியை வெளியே காட்டுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபற்றி பால் குறிப்பிடுகையில், ‘‘ஒருவரை காப்பாற்ற வேண்டும் என்ற தருணத்தில் எந்த விதியும் குறுக்கிட முடியாது, உயிரைக்காப்பாற்றுவதுதானே முக்கியம்’’ என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.