Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 29, 2016

சீனா உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சென்ற கொலம்பிய அழகி சிறையில் வாடும் அவலம்


பிஜீங்

உலக அழகி போட்டியில் கலந்து கொள்ள சீனா சென்ற அழகிக்கு போதை மருந்து கடத்தலில் 15 வருடம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது, மேலும் சிறைவாசம் முடிந்ததும் நாடு கடத்தவும் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.

கொலம்பியாவைச் சேர்ந்தவர் ஜூலியானா லோபஸ் சர்ரசொலா( வயது 22)  கொலம்பியாவில் நடைபெற்ற மிஸ் ஆண்டிகுவாக தேர்வானவர். சீனாவில் கடந்த ஆண்டு  டிசம்பர் மாதம் நடைபெற்ற உலக அழகி போட்டியில் கலந்து கொள்வதற்காக கடந்த ஜூலை 18 ந்தேதி சீனாவின் கங்க்ஜோ பையுன் சர்வதேச விமான நிலையத்தில் உலக அழகி பட்டத்தை வெல்லப்போகும் நம்பிக்கையுடன் வந்து இறங்கி உள்ளார்.

அப்போது விமான நிலைய அதிகாரிகள் அவர் கொண்டு வந்த பொருட்களை சோதனை செய்து உள்ளனர்.சோதனையில் அவர் தனது லேப்-டாப்பில் 610 கிராம் கொகைன் போதை பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்தது கண்டு பிடிக்கபட்டது.

இதை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு குவாங்டோங் மாநிலத்தில் உள்ள மக்கள் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

நீதிமன்றத்தில் சர்ரசொலா போதை பொருள் கடத்தியதை ஒப்பு கொண்டார்.மேலும் தன்னை செர்ஜியோ என்பவர் போதை பொருளை கடத்தும் படி கூறியதாக கூறினார்.

சர்ரசொலா அவர் கடத்திய  போதை பொருளின் அளவை வைத்து  மரண தண்டனை அல்லது  ஆயுள் தண்டனை விதிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

சர்ரசொலா வக்கீல் கூறும் போது போதை பொருள் கடத்தாவிட்டால் செர்ஜியோ தனது கட்டளையை நிறைஒவேற்றாவிட்டால் குடும்பத்தை கொலை செய்து விடுவதாக மிரட்டியதாக கூறினார். இதற்கூறிய போன் ஆடியோ  கோர்ட்டில் தாக்க செய்யப்பட்டு உள்ளது இது கருணை மனுவுக்கு ஆதாரமாக இருக்கும்.என கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.