Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 14, 2016

தேனி, மதுரை மாவட்ட நீர்த்தேவைகளுக்காக பெரியாறு அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் ஜெயலலிதா உத்தரவு


தேனி, மதுரை மாவட்ட குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்காக பெரியாறு அணையில் இருந்து இன்று (14–ந் தேதி) முதல் தண்ணீர் திறந்துவிடப்படும் என்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கோரிக்கைகள்
இதுகுறித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது;–

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளுக்கு முதல் போக சாகுபடிக்காக பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகளிடம் இருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

120 நாட்களுக்கு...
விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று, தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு இருபோக ஆயக்கட்டு பகுதிகளில் முதல் போக சாகுபடிக்கும், தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காகவும், பெரியாறு அணையில் இருந்து 14.7.16 முதல் 120 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டத்தில் உள்ள தேனி, உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டங்களிலுள்ள 14 ஆயிரத்து 707 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.