ஜெர்மனியில் இசை அரங்கு அருகே மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.
தஞ்சம் அடைந்தவர்களின் தாக்குதல்
ஐரோப்பாவில் அகதிகளுக்கு மனிதாபிமானத்துடன் அடைக்கலம் தருவதில் முதன்மை நாடாக திகழும் ஜெர்மனியில் கடந்த சில மாதங்களாக சிரியா, ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் இருந்து வந்து தஞ்சம் புகுந்தவர்கள் தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது.
கடந்த வாரம்தான் முனிச் நகர வணிக வளாகத்துக்குள் புகுந்து ஒரு மர்ம மனிதன் தாக்குதல் நடத்தினான். இதில் 10 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய 18 வயது ஈரானிய-ஜெர்மனி துப்பாக்கி மனிதன் பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.
2 நாட்களுக்கு முன்பு, ஸ்டட்கர்ட் நகரில் கர்ப்பிணி பெண்ணை சிரியா அகதி ஒருவர் கத்தியால் வெட்டிக் கொன்றார். மேலும் இருவரை கத்தியால் குத்தி படுகாயப்படுத்தினார்.
மனித வெடிகுண்டு
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் பவேரியா மாகாணத்தின் அன்ஸ்பாக் நகரில் மனித குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. 40 ஆயிரம் மக்கள் வசிக்கும் சிறிய நகரான இங்குள்ள இசை அரங்கம் ஒன்றில் நேற்று முன்தினம் இரவு இசைத் திருவிழா நடந்து கொண்டு இருந்தது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு மர்ம மனிதர் இசை அரங்கிற்குள் நுழைய முயன்றார். நுழைவு வாயிலில் இருந்த பாதுகாவலர்கள் அவரை உள்ளே விட மறுத்தனர். இதனால் அவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார். இதில் தாக்குதல் நடத்தியவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
12 பேர் படுகாயம்
குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதுமே அங்கிருந்தவர்களில் ஏராளமானோர் நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இதில் சிக்கி 12 பேர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அன்ஸ்பாக் நகர ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இசை அரங்கிற்குள் இருந்த அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர்.
சிரியாவைச் சேர்ந்தவர்
இந்த மனித குண்டு தாக்குதலில் ஈடுபட்டவர் சிரியாவில் இருந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜெர்மனியில் தஞ்சம் புகுந்த 27 வயது வாலிபர் என்பது தெரிய வந்துள்ளது. அவருக்கு ஜெர்மனி அரசாங்கம் முறைப்படி அகதியாக அடைக்கலம் தரவில்லை என்றும் அந்த ஆத்திரத்தில்தான் அவர் ஏராளமானோரை கொன்று குவிக்கும் நோக்கத்துடன் மனித வெடிகுண்டாக மாறி இசை அரங்கம் பகுதிக்கு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. நல்லவேளையாக, இசை அரங்கிற்கு வெளியே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவது தடுக்கப்பட்டது. தாக்குதல் நடந்த அன்ஸ்பாக் இசை அரங்கம் உள்ள பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர்கள் தொலைவில் உள்ள நூரம்பர்க் நகரில்தான் அமெரிக்காவின் விமானப்படைத்தளம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடுப்போம்
இந்த தாக்குதல் குறித்து பவேரியா மாகாண உள்துறை மந்திரி ஜோகிம் ஹெர்மான் நிருபர்களிடம் கூறுகையில், “அடைக்கலம் தேடி வந்தவர்களே இது போன்ற கொடிய குற்றங்களில் ஈடுபடுவது மிகுந்த கவலை அளிக்கிறது. இனி, அகதிகள் இங்கே தாக்குதல் நடத்தினால் அதை தடுப்பதற்கான அனைத்து வழிகளையும் மேற்கொள்வோம். இசை அரங்கில் தாக்குதல் நடத்தியவர் தான் முதுகில் சுமந்து வந்த பெரிய பையில் நிறைய வெடி பொருட்களை வைத்திருந்தார்” என்று குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.