ராமேசுவரம்,
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்துக்கு 7 அடி உயர வெண்கல சிலை கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சிலை இன்று பீடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது.
முதலாம் ஆண்டு நினைவு தினம்
ராமேசுவரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. இந்த நினைவிடத்தில் அறிவுசார் மையம், மணிமண்டபம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு முன் வந்துள்ளது. நாளை மறுநாள் (27-ந்தேதி) அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு மற்றும் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது. மேலும் அன்று ஒருநாள் மட்டும் அனைத்து பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவ-மாணவிகளும் பார்வையிடும் வகையில் தற்காலிக அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.
இங்கு சிலை அமைக்க பீடம் அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று ஐதராபாத்தில் தயார் செய்யப்பட்ட வெண்கல சிலை வேன் மூலம் நினைவிடத்துக்கு கொண்டுவரப்பட்டது. மேலும் தற்காலிக அருங்காட்சியகத்தில் வைப்பதற்காக அப்துல்கலாம் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவையும் கொண்டு வரப்பட்டுள்ளன.
முக சிற்பம்
இன்று (25-ந்தேதி) அப்துல்கலாமின் முழுஉருவ 7 அடி உயர வெண்கல சிலை பீடத்தில் நிலை நிறுத்தப்படுகிறது. மேலும் புதுச்சேரியை சேர்ந்த ஓவியர் குபேந்திரன் மணலால் 100 முகங்கள் கொண்ட அப்துல்கலாமின் முக சிற்பத்தை அமைத்து வருகிறார்.
நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகளை நேற்று அமைச்சர் மணிகண்டன் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது பாதுகாப்புதுறை பொறியாளர்கள் பணிகள் குறித்து அமைச்சரிடம் விளக்கி கூறினார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.