Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

July 2, 2016

இஸ்ரேலில் பயங்கரம் 13 வயது அமெரிக்க சிறுமி குத்திக்கொலை தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை போலீசார் சுட்டு வீழ்த்தினர்


இஸ்ரேல்–பாலஸ்தீனம் இடையேயான எல்லை பிரச்சினை தொடர்ந்து வலுத்து வருகிறது. இதன் விளைவாக அங்கு தினந்தோறும் இஸ்ரேலியர்களை, பாலஸ்தீனர்கள் கத்தியால் குத்தி தாக்குவதும், அவ்வாறு தாக்குதல் நடத்தும் பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய போலீசார் அல்லது பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொல்வதும் வாடிக்கையாகி உள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சர்ச்சைக்குரிய மேற்கு கரை பகுதியில் உள்ள கிரியத் அர்பா என்ற குடியிருப்பு பகுதிக்குள் சென்ற பாலஸ்தீன வாலிபர் அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது அங்கு தனது படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த 13 வயது சிறுமியை, அந்த பாலஸ்தீன வாலிபர் தான் கொண்டுவந்த கத்தியால் சரமாரியாக குத்தினார். இதில் அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து இறந்தார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் விரைந்து சென்று அந்த வீட்டை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்திய பாலஸ்தீனரை சுட்டுக்கொன்றனர். பாதுகாப்பு படையினர் சுட்டதில் குடியிருப்பு பகுதியை சேர்ந்த மற்றொரு நபர் படுகாயம் அடைந்தார்.

இதற்கிடையில் படுகொலை செய்யப்பட்ட அந்த சிறுமியின் பெயர் ஹலேல் யாபா அரியேல் என்பதும், அவர் அமெரிக்காவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்து உள்ளது. இதனை அமெரிக்கா உறுதி செய்துள்ளதோடு தங்கள் நாட்டு பிரஜை கொடூரமாக கெல்லப்பட்டதற்கு கடும் கண்டனமும் தெரிவித்து உள்ளது.

இந்த கோர சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹு, தாக்குதல் நடத்திய பாலஸ்தீன வாலிபரின் வீடு இடித்து தள்ளப்படும் எனவும், அவரது உறவினர்கள் இஸ்ரேலில் வேலைபார்ப்பதற்கு வழங்கப்பட்டு உள்ள அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் கூறினார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.